சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு 

 

  வல்லமை வலைத்தளத்தில் 28 வாரங்களாக வெளிவந்த ‘சிகரம் நோக்கி‘ எனும் கட்டுரைகள், மணிமேகலை பிரசுர மேலாண்மை இயக்குநர் திருவாளர் இரவி தமிழ்வாணன் உதவியுடன் அழகிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

  அதன் வெளியீட்டு விழா, ஓமான் தலைநகர் மசுகட்டில் சீரோடும்  சிறப்போடும் கடந்த கார்த்திகை 04,  2018   : 20-11-2017 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது.

  ஓமனுக்கான இந்தியத்தூதர் மேதகு இந்திரமணி பாண்டே நிகழ்ச்சியைக்  குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி வைத்தார்.   மசுகட்டு தமிழ்ச் சங்கத் தமிழாசிரியைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடினர்.

  திருமதி. இரேவதி சுந்தர் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மசுகட்டு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

  மேதகு இந்தியத் தூதர் நூலை வெளியிட, திருமதி.சித்திரா நாராயண் (Director, Middle East Nursery) , திரு.குமார் மகாதேவன் (Director & Advisor – Oman Sharpooji Co ), திரு.பி.ஆர்.இராமகிருட்டிணன் (CEO, Vision Insurance), திரு.தி.கணேசு (CFO, Bank Muscat ), திரு.சங்கர் (CFO, Bank  Dhofar), திரு. பி.எசு.இலட்சுமணன் (CFO, National Drilling & Services Co), திரு. சிரீதர் நாரணசாமி (Ex – Chairman, ICAI-Muscat Chapter), திரு.  இராசேந்திரன் (GM, National Steel Fabricators)  முனைவர். த. தங்கமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

  விழாவில் மேதகு. இந்திரமணி பாண்டே அறிமுக உரை நிகழ்த்தினார்.  திருமதி. சித்திரா நாராயண் சிறப்புரை கவித்துவமாக இருந்தது.

 ஏனைய சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்க, நூலாசிரியர் சுரேசமீ ஏற்புரை வழங்கினார்.

  மசுகட்டு தமிழ்ச் சங்கப்  பொருளாளர் திருமதி. விசயலக்ஷ்மி சந்திர சேகர் நன்றி கூற, விழா இனிதே முடிந்தது.

  நிகழ்சசியை மசுகட்டு தமிழ்ச் சங்கப்  பொருளாளர் திருமதி. விசயலட்சுமி சந்திர சேகர் தொகுத்து வழங்கினார்.

  இவ்விழாவில் மசுகட்டுவாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, பெருந்திரளான பிற மக்களும் கலந்து கொண்டனர்.