சிகாகோ, பெரியார்,அண்ணா நாள் ; periyarvizhaa_chigago

சிகாகோவில் தந்தை பெரியார்,

அறிஞர் அண்ணா  பிறந்த நாள் விழா

புலம் பெயர்ந்த நாட்டில் புத்துணர்வூட்டிய

புதுமைப் புரட்சியாளர்கள் பிறந்தநாள் 

செப்டம்பர் 18: தந்தை பெரியார், அறிவுச் சூரியன் அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள்களைத்  ‘தன்மானஎழுச்சி’ நாளென்று கொண்டாடினர் சிகாகோநகர் வாழ் தமிழர்கள்..

  சிகாகோ பெருநகர் பெரியார் பன்னாட்டமைப்புச் செயலாளர் திருவாட்டி அருள்செல்வி வீரமணி தலைமையில், உதவி இயக்குநர் திரு.வ.ச.பாபு, சிந்தனைச் சிறப்பு உரையாளர் முனைவர் திரு.பிரான்சி சு.சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில் இந்த நாள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.

  பல்துறை வல்லுநர்கள், மருத்துவர்கள், மென்துறை கட்டமைப்பாளர்கள், திருவாட்டி. விசயலட்சுமி, திருவாட்டி. வினோப்பிரியா, திரு. அரசர்அருளாளர், திரு.ஆனந்தன், திரு.சரவணக்குமார் மணியன், திரு.சிவக்குமார், மருத்துவர் திரு.தமிழவேள், மருத்துவர் திருஞான சம்பந்தம், திரு.பாலகுரு, திரு.பிரசாத்து இராசாராமன், திரு.பொன்னுசாமி, திரு.மணிகண்டன் குணசேகரன், திரு.முத்துவேல், திரு. இரவிக்குமார் வைத்திலிங்கம் எனப் பலரும் எழுச்சியுடன் பங்கு பெற்றனர்.