singai-muthamizhvizhaa01

   தமிழ் மொழித் திங்கள் விழாவின் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏப்பிரல் 5, 2014 அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியது.

singai-muthamizhvizhaa02

  தமிழ் வாழ்த்துடன்  விழா தொடங்கியது. சிங்கப்பூர் சுற்றுப்புற நீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருட்டிணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அடுத்த அங்கமாகக் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் உரை நிகழ்த்தினார். பின்னர் மாணவமணிகள் கலந்து கொண்ட மாறு வேடப் போட்டி அரங்கத்தைக் கலக்கியது.

singai-muthamizhvizhaa03

  விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக முதுபெரும் நாடக ஆசிரியரும்  இதழாளருமான ஏ.பி.ராமன் இவ்வாண்டுக்கான தமிழவேள் விருதாளராக அறிவிக்கபட்டார். அப்போது அரங்கமே அதிரும் வண்ணம் பார்வையாளர்கள்  கையொலி எழுப்பி வரவேற்றனர். அமைச்சர் அவருக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிப் போற்றினார். பின்னர் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கியும் அமைச்சர் சிறப்பித்தார்.

singai-muthamizhvizhaa04

  தமிழகத்தைச் சேர்ந்த பட்டிமன்றப் பேச்சாளரும் வழக்கறிஞருமான க.சுமதி, “வீழ்வேன் என நினைத்தாயோ?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் விழாவிற்குத் தலைமை ஏற்றார். விழாவினைக் கழகச் செயலாளர் சுப.அருணாசலம், ஊடகவியலாளர் மீனா.ஆறுமுகம் ஆகியோர் சுவைபட நெறிப்படுத்தினர். திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

singai-muthamizhvizhaa05 singai-muthamizhvizhaa06