சிறுவர்கள் செய்தார்கள்! வென்றார்கள்!
செய்தார்கள்! வென்றார்கள்!
சுட்டி விகடன் கவின்கலைச் சான்றிதழ்களைப் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வழங்கிப் பாராட்டுதல்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2015- திசம்பர் மாதம் நடைபெற்ற கவின்கலை(FA) செயல் திட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சுட்டி விகடனின் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய செயல் திட்டம் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், அவர்களை ஊக்கபடுத்திய ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.
சுட்டி விகடன் சார்பாக பள்ளிக்கு ஏறத்தாழ 1100 உரூபாய் மதிப்புள்ள விகடன் பதிப்பக 3 புத்தகங்களும் வழங்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ்கள், புத்தங்கங்கள் வழங்கிய விகடன் ஆசிரியர், நிருவாகம் சார்ந்தவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கபட்டது.
Leave a Reply