சென்னையில் வாசு.அரங்கநாதன் ஆற்றிய திருமந்திர உரை
பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் உத்தமம் என்னும் தகவல்தொழில்நுட்ப மன்றத்தின் தலைவராக உள்ளார். இதன் சார்பில் புதுச்சேரியில் வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக இவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
வந்த இடத்தில் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் திருமந்திரத்தின் மொழிநடைகுறித்துச் சிறப்புரை ஆற்றினார்.
சிக்கலான தலைப்பைச்சிறப்பான முறையில் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் விளக்கியதாக வந்திருந்தோர் பாராட்டினர்.
செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்
Leave a Reply