sockalingam+acadamey09

புங்குடுதீவு தாயகம்நிறுவனத்தின் சார்பில்,

சிறப்புற நடைபெறும் சொக்கலிங்கம் அக்கமியின்

இலவச வகுப்புகள்..!

  புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேசு) அவர்களது நினைவாக நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் தொடங்கப்பட்ட “சொக்கலிங்கம் அகதமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே.

  தொடக்கத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது கல்விக்கழகமானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், இப்போது 61 பிள்ளைகள் வரையில் அங்கு கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  இதுவரை காலமும் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்கே இங்கு தனி வகுப்புகள் நடைபெற்று வந்தன. எனினும் பிள்ளைகள், பெற்றோரது வேண்டுகோளுக்கிணங்க இதனை விரிவுபடுத்தி எட்டாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளுக்கு வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இப்போது 61 பிள்ளைகள் வரையில் கல்வி பயில்கின்றனர்.

  இங்கு இரண்டு ஆசிரியைகள் கற்பித்தலை மேற்கொண்டு வருவது மாத்திரமல்லாது தனியாக மற்றோர் ஆசிரியரும் ஆங்கிலம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுக், கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றார் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

  அதேவேளை “சொக்கலிக்கம் அகதமி”யை நேரடியாகப் பார்வையிட்ட அரச அதிகாரிகள் அதிலுள்ள “கழிவறை, தண்ணீர்த் தொட்டி, பாதுகாப்புக்கான நுழைவாயில் (படலை)”, போன்றவற்றைச் சீரமைத்து வழங்குமாறு கோரியதற்கு இணங்க, அனைத்தும் தற்போது அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை அவர்களது குடும்பத்தினரால் திருத்தியமைக்கப்பட்டுச் சிறப்பாக இயங்கி வருகின்றன..

  அதேநேரம் இங்கு கல்வி பயிலும் பிள்ளைகளது வேண்டுகோளுக்கிணங்க, “சொக்கலிங்கம் அகதமியில் பயிலும் மாணவ, மாணவியருக்காக எதிர்வரும் பங்குனி 26, 2046 / 09.04.2015 அன்று “மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி”யினை நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

வாழ்க வளமுடன்,

இவ்வண்ணம்,

திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன்

தாயகம்நிறுவனப் புரவலரன்,

புங்குடுதீவு

பங்குனி 08, 2046 /   01.04.2015.

Yogi sylingam@gmail.com

படத்தின்மீது அழுத்திப் பேரளவில் காண்க!