நிகழ்-குறள்கல்வெட்டு02 :kuralmalai02

 திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் தை 24, 2047 / 7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்(தரமணி), சென்னையில் சிறப்பாக நடந்தேறியது.

 இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுசுமித்து பல்கலைக்கழகப் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான திரு.சிவாபிள்ளை, இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.விசாகன், குமாரபாளையம் எசு.எசு. எம். கல்விக்குழுமத்தின் தலைவரும் நடிகர் பிரபு அவர்களின் சம்பந்தியுமான திரு.எம்.எசு.மதிவாணன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. விசயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

  இக் கருத்தரங்கில், கல்வெட்டுகள் பொறிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மலையப்பாளையம் மலையில் முதல் குறளை உரிய விளக்கத்துடன் பொறித்து, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறைக்கு குறுவட்டையில் பதிவு செய்து ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]