தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.

  முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

  கண்ணங்குடி அரசு தொடக்க நல்வாழ்வு நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி  பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து எடுத்துக் கூறினார்கள்.

  மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்லப் பரிந்துரைத்தனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

  முகாமிற்கான ஏற்பாடுகளை செவிலியர்கள் பத்மாவதி, சண்முகப்ரியா, மருந்தாளுநர்கள் கனிமொழி, சிவக்குமார், உதவியாளர் சாசகான் ஆகியோர்  செய்து இருந்தனர்.

  முகாமின் நிறைவாக ஆசிரியை சாந்தி  நன்றி கூறினார்.

 [படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/