தேவதானப்பட்டியில் அப்துல்கலாமிற்கு இரங்கல் கூட்டம் – சிறப்புத்தொழுகை
தேவதானப்பட்டியில் முன்னாள் குடியரசு தலைவர்
ஆ.ப.சை.அப்துல் கலாம் மறைவையொட்டி
நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது.
கடைகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுக் கடைகள் அடைக்கப்பட்டன; சட்டைகளில் கருப்புத்துணி அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர். அதன்பின்னர் தேவதானப்பட்டி முசுலிம் சமாஅத்து, வணிகர்கள் சங்கம், அனைத்துக் கட்சிமுன்னணியினர் காந்தித்திடலில் அமைதிவணக்கம் செலுத்தினார்கள். அஞ்சலிக்கூட்டத்தில் தேவதானப்பட்டி பேரூராட்சித்;துணைத்தலைவர் பி.ஆர்இராசேந்திரன், தேவதானப்பட்டி சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் முதலான பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊர்வலமாகப் பள்ளிவாசலை வந்தடைந்தனர்.பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகையும், வழிபாடும் நிகழ்த்தப்பட்டன. இச்சிறப்பு வழிபாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பாப்புலர் பிரண்ட்டு ஆப் இந்தியா, மனித நேய மக்கள் கட்சி, இந்திய முசுலீம் ஒன்றியம், இந்திய ஒன்றிய இசுலாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி, பிற அனைத்துக்கட்சியினர், அனைத்துச் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
Leave a Reply