ஒருங்கிணைந்த தொடர்வண்டிப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்)

மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறையில்

பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி

 

தமிழர் எழுச்சி இயக்கம் நடத்திய

கோட்டை நோக்கி மாபெரும் பேரணி!

railagitation04

ஒருங்கிணைந்தரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித்துறையில் பயிற்சி முடித்த 5000 தமிழர்களுக்கு உடனடியாக வேலை வழங்கவேண்டும், ஐ.சி.எப் மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறை வேலைவாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் நேற்றுஎழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடலில் தொடடங்கி  கோட்டைநோக்கிப்பேரணி நடைபெற்றது.

railagitation11
பேரணியைத்தமிழர் எழுச்சி இயக்கத்தின் பொதுச்செயலாளர் வேலுமணி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலை, லேங்க்சு தோட்டம் சாலை வழியாகசென்ற இந்த பேரணியில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறையில் பயிற்சி முடித்தவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள், தொழிலாளர்கள், தமிழர் எழுச்சிஇயக்கத் தோழர்கள் என ஏறக்குறைய 2000-இற்குமேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியில்கலந்து கொண்டவர்கள் ‘தமிழகத்தில் உள்ள இந்திய நிறுவனங்களில் 100 விழுக்காடு பணிகள் தமிழர்களுக்கு வழங்கவேண்டும்’, ‘தமிழகத்தில் உள்ள தென்மண்டலத் தொடர்வண்டித் துறைப் பணியில்பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்யக்கூடாது’ முதலான பல்வேறுமுழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கம் எழுப்பியவாறு சென்றனர்.பாந்தியன் சாலை சந்திப்பு வரை நடைபெற்ற பேரணியின் இறுதியில் கண்டனக் கூட்டம்நடைபெற்றது.

அங்குதிரண்டிருந்த தொழிலாளர்களிடையே.. நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக்கழகத் தலைவர்எசு.ஐதர் அலி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, ஊடகவியலாளர் டி.எசு.எசு.மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்ம. வாசுதேவன், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் து.வெ.வேணுகோபால், விடுதலைச்சிறுத்தைக் கட்சியின் தனிச்செயலாளர் கு.க.பாவலன், தமிழகப் பெண்கள் செயற்களம்செயலாளர் இசைமொழி ஆகியோர் எழுச்சியுரையாற்றினார்கள்.

சென்னைமாவட்டச் செயலர் குமரவேல், காஞ்சி மாவட்ட செயலர் கண்ணன் ஆகியோர்முன்னிலையில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான தொழிலாளர்களும் பங்கேற்றனர்.