புது இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா
புது இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா லிட்டில்டன், மச்சசுசீத்சுசில் பிப்ரவரி 09 ஆம் நாள் இனிதே கொண்டாடப்பட்டது. இயல், இசை, நாடகம் என சின்னஞ்சிறார் மட்டும் அன்றிப் பெரியவரும் பங்குபெற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிசுபாரதி மாணவர்கள் மூலம்,’கல்வியின் சிறப்பை’ எடுத்துரைக்கும் வகையில் நாடகத்தை இயற்கையாகவும் நகைச்சுவையுடனும் நையாண்டி பாடல்களோடு எழுதி வடிவமைத்திருந்தார் உமா நெல்லையப்பன். இனியா, (இ)லையா, அசுமிதா,அட்சயா, கேசவு, சூரியா, சனனி,அமியா, வர்சிணி, சிந்து,அரிணி,அம்சா, சஞ்சனா ஆகியோர் பங்கேற்று, திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார் ஆகியோரின் கல்வி தொடர்பான கருத்துகளை மேற்கோளாக எடுத்துரைத்துச் சிறப்பாக நடித்துக் கரவொலி பெற்றனர். கல்வியின் சிறப்பை எடுத்துக்கூறும் வகையில்,”கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு” என்ற தொடருடன் நாடகம் இனிதே நிறைவு பெற்றது. அவர்களைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர், நாட்டியங்கள், நாடகங்கள், பாடல்கள் என்று அரங்கத்தாரைக் களிப்படைய செய்தனர். மேலும் பெரியவர் பங்குபெற்று ஆடிய வேகமான உற்சாகமான ஆட்டம் பார்வையாளர்களை மகிழ்வித்தது.
Leave a Reply