புளோரிடாவில் பொங்கல் விழா
புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் தைப்பொங்கல் பண்டிகை, மத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆர்லாண்டோ நகரில் வசிக்கும் தமிழர்கள் ஆலயத்தில் ஒன்று கூடிப் பொங்கலிட்டுச் சூரியனுக்குப் படையலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் எனக் கலந்து கொண்ட அனைவரும் நமது பரம்பரை உடையில் வந்திருந்திருந்தது விழாவிற்குக் கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்திருந்தது.
இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-தரவு : மோகன்ராசு கதிரவன்
Leave a Reply