பூட்டப்பட்டது அண்ணா மேம்பாலம்!
மாணாக்கர் எழுச்சி!
முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டியும் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன் முதலான தமிழ் ஆர்வலர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டியும் மாணாக்கர் போராட்டம் நாடெங்கும் நடைபெறுகிறது. அதில் ஒன்றாக, வரலாற்றில் முதன்முறையாக சென்னை அண்ணா மேம்பாலத்தைச் சங்கிலியால் பூட்டிப் போக்குவரத்தை முடக்கினர் மாணாக்கர்கள்.
இப்போராட்டத்தில் 70 மாணாக்கர்களும் இயக்குநர் கௌதமன் முதலான உணர்வாளர்கள் பலரும் தளையிடப்பட்டுள்ளனர்.
போராட்டங்கள் மேலும் பரவும் முன்னர் அரசு தலையிட்டு நல்ல முடிவு காணும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply