முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம்

தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களின்

நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா

தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

 vaithiyalingam+100+01 vaithiyalingam+100+02 vaithiyalingam+100+03 vaithiyalingam+100+04

தஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திர ஒன்றிய திராவிடர் விடுதலைக்கழக தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழாஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை அழகியநாயகிபுரத்தில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக்கழக, சேதுபாவாசத்திர ஒன்றியச் செயவலர் சீனிகண்ணன் வரவேற்புரையாற்றினார். அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் கொள்கை வழியில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களைப் பாராட்டி, கரிசவயல் தொடக்கப்பள்ளித் தாளாளார் இராமலிங்கம், பேராவூரணி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திருஞானசம்பந்தம், அழகியநாயகிபுரம் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பக்கிரிசாமி, கரிசவயல் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வேலாயுதம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கூத்தலிங்கம், கவிஞர் குணா, இந்தியப்பொதுவுடைமை மார்க்சியக்கட்சி நகரச்செயலர் கந்தசாமி, தமிழக மக்கள் புரட்சிக்கழகக் கொள்கைப் பரப்புச் செயலர் ஆறுநீலகண்டன், உழைக்கும் மக்கள் கட்சி அமைப்பாளர் வீர மாரிமுத்து, பகுத்தறிவாளர் கழகச் செயலர் ஆத்மநாபன், திராவிடர் விடுதலைக்கழக, திருவாரூர் மாவட்டச்செயலர் காளிதாசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பாரி, கழகப் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன், பட்டுக்கோட்டை வளவன், கழகச்சொற்பொழிவாளர் முனைவர் சீவானந்தம், மாநிலப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன், சமூக மேம்பாட்டு இயக்க அமைப்பாளர் சேம்சு மெய்சுடர், ஆசிரியர் வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக்கழகப் பொதுச்செயலர் அரங்க குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களைப் பாராட்டி திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விழாவில் வைத்தியலிங்கம் அவர்களுக்கு, பேராவூரணி ஒன்றிய, திராவிடர் விடுதலைக்கழகம் சார்பாக ஒன்றிய அமைப்பாளர் சித.திருவேங்கடம் நினைவுப் பரிசு வழங்கினார். தனது நூற்றாண்டு விழாவையொட்டி, திராவிடர் விடுதலைக்கழகத்திற்கு உரூபாய் ஐந்தாயிரத்தை கழக வளர்ச்சி நிதியாக வைத்தியலிங்கம் அவர்கள் தோழர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார்.

இறுதியாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவ.சோதி நன்றி கூறினார்.