மத்திய அரசின்  சான்றிதழ் வழங்கும் விழா

தேவகோட்டை தேவகோட்டைபெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அனைருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விழாவில் 8 ஆம் வகுப்பு மாணவர் சௌமியா  வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தங்கினார்.

  மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாகத் “தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களைப் பெற்றோர்கள் சார்பில் நடராசபுரம் மலர், இறகு சேரி (தொட்டிய நாயக்கர்) செஞ்சிமாரி வழங்கினர். இப்போட்டிகளில்  8 ஆம் வகுப்பு மாணவி தனம்   முதல் பரிசையும் ,அதே வகுப்பைச் சார்ந்த முனீசுவரன்   இரண்டாம் பரிசையும், 7 ஆம் வகுப்பு மாணவி பிரவீனா  மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

மாநில அளவில் மத்திய நீர்வாரியம் சார்பாக நடைபெற்ற “நீரைச் சேமிப்போம்!   வரும்காலம் காப்போம்!” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் கலந்துகொண்டோருக்கான சான்றிதழ்களைப் பெற்றோர் சார்பாக சீதாலெட்சுமி வழங்கிப் பள்ளியைப்பற்றிப் பேசினார். இப்போட்டிகளில் 7 ஆம் வகுப்பு மாணவர்  சீவா  முதல் பரிசையும் 8 ஆம் வகுப்பு மாணவர் வசந்தகுமார்   இரண்டாம் பரிசையும் 7 ஆம் வகுப்பு மாணவி பரமேசுவரி  மூன்றாம் பரிசையும், பெற்றனர்.

போட்டியில்  கலந்துகொண்ட அனைவருக்கும்(ஏறத்தாழ 80 மாணவ,மாணவியர்க்கு) மத்திய அரசின் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ,மாணவியர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி  செய்திருந்தார். விழாவின் நிறைவாக 8 ஆம் வகுப்பு மாணவி சுமித்ரா  நன்றி கூறினார்.

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/