தலைப்பு- விழிப்புணர்வுக்கும்மி : thalaippu_manickavasakampalli_vizhipunarvukalainighazhchigal

மாணிக்கவாசகம் பள்ளிமாணாக்கரின் வாக்காளர் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள்

 

பள்ளி மாணவர்களின் நாடகம்,கும்மி நடனம்,கவிதை,ஆங்கில பேச்சு 

100 சதவிகித வாக்காளர் விழிப்புணர்வு

 

தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசுஉதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக நடராசபுரம் சின்ன மாரியம்மன் கோவில் முன்பாக 100  விழுக்காட்டு  வாக்காளர் விழிப்புணர்வினை வலியுறுத்திக்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

  நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)செயபால் சிறப்புரை வழங்கிப் பேசுகையில், “இந்த முறைத் தேர்தல் ஆணையம் 100  விழுக்காடு வாக்களிப்பை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகப் பள்ளி மாணவர்களின் வாயிலாக விழிப்புணர்வைக் கலை நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகிறோம். எனவே அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்”  என்றார்.

  தேவகோட்டை நகராட்சிப் பணி ஆய்வாளர் செந்தில் குமார் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுத் தாள்களைப் பொது மக்களிடம் வழங்கினார். வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான ‘உன்னைத் தேடி’ என்கிற கவிதையை 4 ஆம் வகுப்பு ஐயப்பன் வாசித்தார்.  வாக்களிப்பதன்   இன்றியமையாமையை வலியுறுத்தி 8 ஆம் வகுப்பு ஆகாசு குமார் ஆங்கிலத்தில் பேசினார். ‘வாக்களிப்பது நமது உரிமை’ என்கிற தலைப்பில் காயத்திரி, சாய் புவன், பரத்குமார், சகா, பெரியகருப்பன், கருப்பையா, தினேசு  ஆகிய மாணவர்கள் குழு நாடகம் நடத்திக் காண்பித்தனர். ‘பூமியைப் புரட்டுவோம்’ என்கிற தலைப்பில் 8 ஆம் வகுப்பு  (இ)யோகேசுவரன் வாக்காளர் விழிப்புணர்வு கவிதை வழங்கினார். மாணவிகள்  இராசலெட்சுமி, பூபதி, காவியா, பார்கவிஇலலிதா, சுருதி, சுமித்ரா, தனம் ஆகியோர் கொண்ட குழு கும்மி பாட்டுப் பாடி நடனம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

  கலை நிகழ்ச்சிகளைக் காண ஏராளமான பொது மக்கள்  வந்திருந்தனர். வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் சார்பாகவும், வாக்களிப்பது தொடர்பாகவும் பொது மக்கள் சத்யா, இலெட்சுமி ஆகியோர் பேசினார்கள் . நிகழ்ச்சிகளை ஆசிரியை கலாவல்லி தொகுத்து வழங்கினார்.

  முன்னதாக மாணவ,மாணவியரின் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆசிரியர்கள்  சிரீதர், கருப்பையா, ஆசிரியை முத்துஇலெட்சுமி  ஆகிய இருவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

.நிறைவாக நகராட்சித் தேர்தல் பிரிவு எழுத்தர்  இராமகிருட்டிணன் நன்றி கூறினார்.

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/