மாணிக்கவாசகம் பள்ளி, பெற்றோர்-ஆசிரியர் கூட்டம்01 :nighazh_manikkavasakarpalli_petroar_aasiriyarkuuttam01 மாணிக்கவாசகம் பள்ளி, பெற்றோர்-ஆசிரியர் கூட்டம்02 :nighazh_manikkavasakarpalli_petroar_aasiriyarkuuttam02 மாணிக்கவாசகம் பள்ளி, பெற்றோர்-ஆசிரியர் கூட்டம்03 :nighazh_manikkavasakarpalli_petroar_aasiriyarkuuttam03

பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்

நடுநிலைப் பள்ளியில்

பெற்றோர் ஆசிரியர் கழகக் கலந்தாய்வுக் கூட்டம்  

தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்தோரை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.

இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்குத் தலைமை தங்கினார்.

பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சார்ந்த தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல் வித்தைகள் தொடர்பாகப் பெற்றோரிடம் பேசினார்.

கூட்டதில் தேசிய திறன் வழித் தேர்வில் 4 மாணவர்கள் வெற்றி பெற்றதற்குப் பாராட்டு தெரிவிக்கபட்டது.

மாணவ,மாணவியர் விடுமறை எடுக்காமல் பள்ளிக்குத் தொடர்ந்து வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்குப் பெற்றோர் முழு  ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கேட்டுகொள்ளபட்டது.

 நிகழ்ச்சியில்   திருக்குறளை இசையோடு நடனமாடும் நிகழ்ச்சி மாணவிகளால் நடத்தப்பட்டது. 1ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் பஞ்சபூதம், கண்டங்கள், மகாத்மா காந்தி தொடர்பான பாடல்களைத் தங்கள் மழலை மொழியில் அழகாகப் பாடினார்கள். 1 ஆம் வகுப்பு திவ்யசிரீ  தூய்மை பற்றி ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார். 2ஆம் வகுப்பு மாணவி தேவதர்சினி பாரதியார் பாடல்  பாடினார்.

  2 ஆம் வகுப்பு மாணவர் வெங்கடராமன் ஒற்றுமை உணர்வு தொடர்பாகவும், 3 ஆம் வகுப்பு  சனசிரீ,  சவகர்லால் நேரு தொடர்பாக ஆங்கில உரையும், 4 ஆம் வகுப்பு அசய்பிரகாசு நேரம் தவறாமை தொடர்பாக உரையும் 8 ஆம் வகுப்பு தனம் வள்ளுவர் பற்றியும், ஆகாசு குமார் ‘மாணவரும்,சமுகதொண்டும்’ என்கிற தலைப்பில் உரையும் நிகழ்த்தினார்கள்.

  3 ஆம் வகுப்பு கீர்த்தியா திருமுருகாற்றுப்படை பாடலையும்,  7 ஆம் வகுப்பு இராசேசுவரி தேவாரம் பாடலையும் பாடினர்.

  6ஆம் வகுப்பு  இரஞ்சித்து ‘தன்னம்பிக்கை’ கவிதை  வாசித்தார்.

முன்னாள் மாணவர் நடராசனின் தந்தை இராமசந்திரன் பள்ளியில் தன் மகன் இது வரை பெற்ற அனைத்துச் சான்றிதழ்களையும் விரிவாக  எடுத்துக் கூறினார்.

பெற்றோர்கள் உமா மகேசுவரி, மீனாள், காந்தி, இலெட்சுமி ஆகியோர் பள்ளியைப்பற்றிப் பேசினார்கள்.

   ஆசிரியர்கள் வாசுகி, முத்து மீனாள், சிரீதர், கருப்பையா ஆகியோர் மாணவர்கள் தொடர்பாகவும், பெற்றோர்கள் செய்ய வேண்டியது தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்கள்.

   ஆசிரியை முத்து மீனாள் நன்றி.

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/