முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு
முகிலை இராசபாண்டியனின்
பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு
ஐப்பசி 28, 2047 / நவம்பர் 13, 2016 அன்று மாலை, வண்டலூரிலுள்ள தலைநகரத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளைச்சாமி அரங்கத்தில் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு நடைடபெற்றது.
தொடக்கத்தில், என்.ஆர்.கே.மூர்த்தி, பொதிகை செல்வராசு, சீனத்து நித்திகா நிசா, செம்பியன் நிலவழகன், பாலு.தண்டவபாணி, குலோத்துங்கன், செந்தமிழ்ச்சித்தன், முகில்சன், சீதரன் ஆகிய கவிஞர்கள், தத்தம் கவிதைகள் வாசித்தனர். பின்னிருவரும் சிறுகதைகளும் கூறினர்.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் முப்பது, முப்பது சொற்பொழிவுகள் ஆற்றிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுனப் பதிவாளர் பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் இப்பொழுது பெரியபுராணத் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார். இந்நிகழ்வு அவரது 18 ஆம் தொடராகும். இதில் ஆனாய நாயனார் குறித்து உரையாற்றியதுடன் ‘ஆனாய நாயனார்‘ நூலையும் வெளியிட்டார். கடந்த சில திங்களாக இவ்வாறு பொழிவிற்குரியவர்களின் நூலை வெளியிடும் சிறப்பான பணியை அவர் ஆற்றி வருகிறார்.
‘அகரமுதல மின்னிதழ்’ ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கி, ஆனாய நாயனார் நூலையும் வெளியிட்டார்.
நூலின் புரவலர் செந்தமிழ்ச்சித்தன் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டார்.
கவிஞர் செந்தமிழ்ச்சித்தன் வரவேற்புரை யாற்றினார். கவிஞர் நா.ஞானசேகரன் நன்றி நவின்றார்.
கவிஞர் இராதா ஞானசேகரன் நிகழ்வை ஒருங்கிணைத்துத் தொகுப்புரை யாற்றினார்.
(படங்களை அழுத்தின் பெரிதகாக் காணலாம்.)
String could not be parsed as XML
Leave a Reply