வட்டுக்கோட்டை மிதிவண்டிகள்அளி்ப்பு01 ;vaddukottai_mithivandi01

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால்

இரண்டு  மிதிவண்டிகள் அன்பளிப்பு

 எமது புலம்பெயர் உறவான  இலண்டன்  மாநகரைச் சேர்ந்த  சந்தியா, தன் 12 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு  இரண்டு மாணவிகளுக்குப் புதிய  மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார்.

  மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின்  பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்க முன்னாள் தலைவரும், கனடா கிளைச் சங்க முன்னாள் தலைவரும் தற்போதைய  செயற்குழு உறுப்பினருமான ச. உலோகேசுவரனால்  சங்கானை சிவப்பிரகாச மாணவன் சதீசுவரன், வட்டு மத்தியக் கல்லூரி மாணவி ம.கீதாஞ்சலி ஆகிய இருவருக்கும்  மிதிவண்டிகள் கையளிக்கபட்டன.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

தரவு: தங்க ஆதவன்