வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் தீபாவளி நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குப் புத்தாடைகளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன..

  எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த பரஞ்சோதிஉலோகஞானம், தன் தந்தை பரஞ்சோதி (17.10.2016),  தங்கை இராசேசுவரி (16.10.2016) பிறந்த  நாள்களை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலனற்ற, சிறப்புத் தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குச் சிறப்பு நண்பகல் உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி  நாளினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு  ஏறத்தாழ 1,13,000  உரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினுடாக அன்பளிப்பாக வழங்கியுள்ளர்.

  உலோகன் அவர்களின் தந்தையான பரஞ்சோதிக்கும், அவரின் தங்கையான இராசேசுவரிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன். கருணை உள்ளம் கொண்ட உலோகஞானம் அவர்களின் குடும்பம் நல்லாசியுடன் என்றும் சிறப்பாக இருக்க எல்லாம் வல்ல சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாளை இல்ல மாணவர்கள் சார்பிலும் சங்கத்தின் சார்பிலும் வேண்டிக்கொள்வதுடன். மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]