வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு
வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு
வலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும்.
உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட ‘வாசிப்புப் போட்டி – 2017‘ இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் விடை கிடைக்காத போதும் (அதாவது, நூல்களை வாசித்து நூலாசிரியர்களின் பதிலைத் தொகுத்துத் தரமுடியாமை), கிடைத்த பதில் தொகுப்புகளில் ஒருவரை மகிழ்வோடு தெரிவு செய்துள்ளோம்.
அதாவது, நிறைவாக நூல்களை வாசித்து விடை தந்த அவரை மதிப்பளிக்க விரும்புகிறோம். அவரது விரிப்பைக் கீழே தருகின்றோம்.. இனிய வலைவழி உறவுகளே, நீங்களும் அவரை வாழ்த்தி மதிப்பளித்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம். நாமும் அவருக்கு
புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Dicovery Book Palace) (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 640/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான பரிசுச்சான்றிதழை மார்கழி 17,2048 – 01/01/2018 இற்கு முன்னதாக அனுப்பிவைப்போம்.
வாசிப்புப் போட்டி – 2017 இன் வெற்றியாளர்
சொந்தப் பெயர் – த.அபிநயா
முகவரி
பழைய எண் 50, புது எண் 84,
கப்பல் போலு தெரு,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை – 600021
அன்புடன் யாழ்பாவாணன்
Leave a Reply