குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 13-06-2014 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் செம்மொழி விழா அரங்கில் மிகச்சிறப்பாக தமி்ழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது.

 

(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

 

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது அவர்கள் வரவேற்க, முனைவர் அரவணைப்பு திரு. இளங்கோவன், முனைவர் திரு. பால் மனுவேல், பொறியாளர் திரு சாந்தகுமார், தமிழ் உணர்வாளர் திரு.தயாளன் ஆகியோர் விழா மேடைக்கு சிறப்பு சேர்த்தனர்.

விழாவில் முத்தாய்ப்பாக இயற்கை முறை மருத்துவம் பற்றி மருத்துவர் திருமதி.சுதந்திராதேவி அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமுறையைக் கூறு எளிய பயிற்சி முறையைச் செய்து காட்டினார்கள். மருத்துவரின் செய்முறை விளக்கம் வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் மிகப் பயனுள்ளதாக அமைந்தது.

கவிதைத் தளத்தில் கவிஞர் கோவிந்து, திரு சண்முகம் ஆகியோர் கவிதையை வழங்கினர்.

விழாவின் மண்ணிசைப் பாடல் பிரிவில் திரு பாண்டி, திரு அசோகன், திரு இராமகிருட்டிணன் ஆகியோரும், மெல்லிசைப் பாடல் பிரிவில் திருமதி இராணிமோகன், திருமதி மஞ்சுளா, திரு கணேசன், திரு. சண்முகம், திரு நெல்சன் ஆகியோரும் பாடி வந்திருந்த அனைவரையும் இன்னிசை மழையில் நனைத்தார்கள்.

வேளாண்மைத் தளத்தில் சிறப்புரை ஆற்றிய கவிஞர் பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் கருவேல மர ஒழிப்பின் தேவையை மிகச் சிறப்பாகப் பதிவு செய்தார்.

தமிழ இலக்கியத்தளத்தில் திரு பழ கிருட்டிணமூர்த்தி, கவிஞர் இராவணன், திரு சாந்தகுமார், திரு தயாளன் ஆகியோர் மிகச் சிறப்பாக இலக்கியச் சுவையை வழங்கினார்கள்.

சங்கத்தின் செயல்பாடுகளை, கவிஞர் முனு.சிவசங்கரன், கவிஞர் விருதை பாரி ஆகியோரும், கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பார்வையாளராக வந்திருந்த திரு முகுந்தன் அவர்கள் தன் எண்ண வெளிப்பாட்டையும் பதிவு செய்தனர்.

விழாவில் இந்த ஆண்டிற்கான சிறப்பான விழாவை வரும் அக்டோபர் 5இல், தமிழகத்தின் தலை சிறந்த மண்ணிசைக் கலைஞர்களாக வலம் வரும் இணையர் திரு/திருமதி மகிழினி மணிமாறன் அவர்களை அழைத்து நடத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

நிறைவு உரையை முனைவர் அரவணைப்பு இளங்கோவன் அவர்களும், நன்றியுரையை, சங்கத் துணைத்தலைவர் அலெக்சு அவர்களும் நல்க, விழாவினை கவிஞர் செங்கை நிலவன் தொகுத்து வழங்க இரவு விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.