68 ஆவது திங்கள் பாவரங்கம்
புதுச்சேரி : 27.01.2014 அன்று மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்திய
68 ஆவது திங்கள் பாவரங்க நிகழ்வில்
“திருக்குறளைத் தேசிய நூலாக்கு” என்ற தலைப்பில் மரபுப் பா, புதுப்பா படித்தனர். மற்றும் துளிப்பா, சிறார் பா , மொழிபெயர்ப்புப் பா, கழக இலக்கியம் அறிமுகம் ஆகியவை நடைபெற்றன.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் செயலராக தேர்வு பெற்ற பரிதியன்பன் (மு. பாலசுப்பிரமணியன்) அவர்களை மாணவர் பொதுநலத் தொண்டியக்கத்தின் செயலர், தேசிய குழந்தை விருதாளர் கு.அ.அறிவாளன் சிறப்பித்தார்.
தலைவர், தேசிய குழந்தை விருதாளர் கு.அ. தமிழ்மொழி பாராட்டினார்.
நிகழ்வில் பைரவி, சி.வெற்றிவேந்தன், இராம் குமார், ச.உமாபதி, விக்டர் நிக்கோலசு, வ.விசயலட்சுமி, வ.பழனி, மு.பாலசுப்பிரமணியன், ம.திருநாவுக்கரசு, த.தயாளமூர்த்தி, செ.பிச்சமுத்து, மு.சதாசிவம், இராச.முருகையன், அரச.மணிமாறன், அருவினையாளர் செ.வெங்கடேசன், கி.பாலசுப்ரமணியன், பெ.குமாரி, கு.அ. அறிவாளன், புதுவைத் தமிழ்நெஞ்சன், கு.அ. தமிழ்மொழி ஆகியோர் பங்கேற்றனர்…
Leave a Reply