ஆடி 12, 2045 / 28.07.2014

புதுச்சேரி

மாணவர் பொதுநலத் தொண்டியக்கம்

74 ஆவது திங்கள் பாவரங்கம்

மரபுப் பா,புதுப் பா, துளிப்பா, மொழிபெயர்ப்புப் பா, சிறார் பா பாவரங்கம் மற்றும் கழக இலக்கியம் அறிமுகம் நடைபெற்றது.

கலந்துகொண்டோர்:

பாவலர் ஆலா, மஞ்சக்கல் உபேந்திரன், பைரவி, சோ.கு,செந்தில்குமரன், பரிதியன்பன், சி. வெற்றிவேந்தன், கதிர். முத்துரத்தினம், இரமேசு, அரச.மணிமாறன், உரு.அசோகன், இராச.முருகையன், தி.சி.செம்மல், கு.அ. அறிவாளன், கு.அ. தமிழ்மொழி, பெ.குமாரி மற்றும் புதுவைத் தமிழ்நெஞ்சன்

தீர்மானம்:

  1. தமிழ்வழிக் கல்வியை மறுக்கும், இந்தி சமற்கிருதத்தைத் திணிக்கும், நடுவண் கல்வி வாரிய பாடத்திட்டம்(CBSE) தன்னை நீக்கி மீண்டும் சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்

       2. சமற்கிருதகிழமை ( வாரம் ) கொண்டாட நடுவண் அரசு ஆணையிட்டதை உடனே திரும்பப் பெறவேண்டும் எனப் புதுச்சேரி அரசு தமிழக அரசைப் போல முடிவெடுக்க வேண்டுமெனமாணவர் பொதுநலத் தொண்டியக்கம் கேட்டுக்கொள்கிறது

   3. 75 ஆவது திங்கள்பாவரங்கம் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதுவரை கலந்துகொண்டஅனைவருக்கும் சான்றிதழ் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.

puduchery-74aavathu paavarangam