image-6750

தலைத்தலைமை – அரும்பு

நாமேடை தமிழ் நாடாக்கும் நடைமேடை; சிந்தனையோ பூமேடை; கருஞ்சிவப்பாய்ப் பூத்தவிழி இந்திக்குத் தீமேடை; புகழுக்குத் தெருவெல்லாம் மணிமேடை; கோமேடைப் பழங்காஞ்சிக் கொற்றவன்தான் குணமேடை. முக்கோணத் தமிழகத்தின் முழுக் கோணல் நீக்குகிற தெக்காணப் புதுச்சிற்பி; திருக்குறள்போற் சிறுவடிவம்; எக்கோண மும்நோக்கும் இயல்பறிவு; தூக்கியதோர் கைக்கோணத் துள்இளைஞர் கடற்கோணப் பெருந்தேக்கம். ஒருமைப்பா டென்று தமிழ் ஒழிக்கவரு வார்க்கெதிரே ஒருமெய்ப்பா டில்லாமல் உலவுகிற தமிழரிடை, பெருமைப்பா டொழியாத பெருகுதமிழ் மறத்திற்கு வறுமைப்பா டில்லையென வாழுகிற அகச்சான்று. ‘நாடெ’ன்பான், ...
image-6746

வரலாற்று வானத்தில் – ஔவை து.நடராசன்

  அசையும் கிளையில் அமர்ந்து கொண்டு நாட்டைப் பற்றி இசை பாடிக் கொண்டிருந்தது ஒரு குயில். அரங்கத்தின் நின்று கொண்டு இனிய தமிழை மிழற்றிக் கொண்டிருந்தது ஒரு கிளி. இன எழுச்சி என்ற பள்ளி எழுச்சிக்கு ஓசை கொடுத்துக் கொண்டிருந்தது ஒரு காக்கை.   வரலாற்று வானத்தில் இந்தப் பகுத்தறிவுப் பறவைகள் வட்டமிட்டதால் பாட்டுத் தமிழின் பரணி ...
image-6743

அண்ணாவன்றோ? – அறந்தைத் திருமாறன்

வெடிக்கின்ற எரிமலையைப் பாய்ந்து சீறி விரிக்கின்ற நெடுநதியை நாளும் ஓயா(து) அடிக்கின்ற கடலையை மேகத் துள்ளே அலறுகின்ற இடியொலிகள் அனைத்தும் பேச்சில் வடிக்கின்ற ஆற்றலர்யார்? கருத்தை யள்ளி வழங்குகொடை வள்ளல் யார்? கொடுமை கண்டு துடிக்கின்ற உளத்தர்யார்? புரட்சியாளர் தொடருக்கே ஒளி விளக்காம் அண்ணா வன்றோ! குற்றால அருவியதின் குளிரும்; நல்ல குலைக்கனியின் சார்தந்த சுவையும்; நஞ்சை வற்றாத தஞ்சையதின் வளமும்; சேர வளநாட்டின் இயற்கையதின் செழிப்பும்; என்றும் முற்றாத செந்தமிழின் இளமையெல்லாம் முழுவடிவாய்ப் ...
image-6740

செயற்கரிய செய்த பெரியார் – புலவர் வி.பொ.பழனிவேலன்

ஈரோட் டரிமா இணையற்ற இராம சாமிப் பெரியார் இத்தமிழ் நாட்டில் தோன்றா திருந்தால் தமிழர் யாவரும் ஆரியர்க் கடிமையாய் ஆகி யிருப்போம். இதனில் ஐயம் ஒருசிறி தில்லை. தமிழர் குமுகம் தன்மா னத்துடன் தலைநிமிர்ந் துலவத் தண்ணளி செய்த அண்ணல் ‘பெரியார்’ அன்றி வேறிலை. துணிவும் பணிவும் தூய உள்ளமும் நனியும் பெற்றவர் நந்தமிழ்த் தலைவர். செல்வச் சிறப்பும் சீர்பல பெற்றும் சொல்லில் உரப்பும் சோர்விலா உழைப்பும் தமிழர் நலனே தம்நல மென்றும் பட்டி ...
image-6735

புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு : தமிழண்ணல்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் தனிச் சிறப்பும் மறுமலர்ச்சிப் போக்கும் உடையதாகும். அது புரட்சியில் கிளைத்துப் புதுமை பூத்துப் பொலிகின்றது. இவ்வளர்ச்சியில் பங்கு பெறும் சான்றோர் பலருள் அறிஞர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தலையாய இடம் பெறுகிறார்கள். கொள்கை வேறுபாட்டுக்காகத் தம் கண்களைக் மறைத்துக் கொண்டு உண்மையை மறுத்தல் முறையன்று. ‘‘காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்’’ ...
image-6729

பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய் மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க!
image-6725

தேசிய ஒருமைப்பாடும் தமிழும் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

பாரதியார் கருத்து தேசிய ஒருமைப்பாட்டினை விரும்புவோரில் சிலர், ‘தமிழர் வாழ்க’, ‘தமிழினம் வாழ்க’ என்ற முழக்கங்களை வெறுக்கின்றனர். இது அறியாமை, இந்த அறியாமையைப் பாரதியார் வெறுத்தார். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு என்ற வரிகளிலே - தமிழை வாழ்த்தி, பின் தமிழரை வாழ்த்தி, அப்புறம் பாரத நாடு முழுவதையும் வாழ்த்துகின்றார் பாரதி. தமிழை மறந்து ‘தமிழர்’ ...
image-6721

இந்நாட்டு மும்மணிகள் – பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

    தமிழகத்தில் வாழும் நம்முள்ளத்தில் செப்டம்பர் திங்களில் தோன்றித் திகழும் செம்மல்களான மும்மணிகள், நம்நாட்டுப்புதுமைக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும் மூடக் கொள்கைகளில் முடங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்த ஈ.வே.இரா.பெரியாரும், அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு அழிவு தோன்றும் நேரத்தில் முன்வந்து தமிழ்காக்க முனைந்து நிற்கும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். முன்னவர் ஆங்கிலர்க்கு அடிமைப்பட்டு நாட்டை ...