திருக்குறள் வாழ்வியல் நூல்!

  - சுப.வீரபாண்டியன் ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய் மொழியை மறந்துவிடாதீர்கள்! எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்.. ஆனால், சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்! மூத்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! குறைந்தது திருக்குறளையாவது பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்காது என்பதுதான் உண்மை. ஆனால்,திருக்குறள் படித்தால், கிடைத்த வேலை நிலைக்கும். புதிய உறவுகள் ...

தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!

முந்தைய செய்தி இலங்கை பொதுவள ஆய மாநாட்டை இந்திய அரசு, முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்! தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!   இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களைக் கொன்று குவித்துப் போர்க்குற்றத்திலும் இனப்படுகொலைகளிலும்  ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் பொதுவள ஆய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் ...

பிரித்தானியத் தமிழர் பேரவை அறிக்கை

முந்தைய செய்தி சட்ட மன்றத் தீர்மானம் அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றது: பிரித்தானியத் தமிழர் பேரவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் செயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இன்னல் தீர அம்மையார் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ...

காணிக்கை

விடுதலைப்பூ ஒரு நாளில் மலர்ந்திடாது - என்றாலும் என்றேனும் ஒரு நாள் மலர்ந்தே தீரும் என்ற நம்பிக்கையில் தாய் மண் காக்க உயிர் நீத்த உறுப்புகள் இழந்த உறவுகள் பிரிந்த உடைமைகள் பறிகொடுத்த ஈழத்தமிழ் மாவீரர்களுக்கும் தாய்மண்காக்கப் போராடிய, போராடும் மண்ணின் மைந்தர்களுக்கும்

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள்

  - வெற்றிச்செழியன் செயலர், தமிழ்வழிக்கல்வி இயக்கம் தமிழ்வழிக் கல்வி        “தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது, சரியானது”, என நாம் அனைவரும் அறிவோம்.  உலகெங்கும் வாழும் அறிஞர்கள் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.  தமிழ் நமது தாய்மொழி; எனவே, தமிழே நமது கல்வி மொழியாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.         தமிழ் நமது தாய்மொழி என்ற நிலையைத் தாண்டி, தலைமுறைகளாய் வளர்ந்து வரும் ...

அனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்

 - வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர்.  தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் கடந்த 8 ஆம்  நாள் திறக்கப்பட்டு, 9,10  நாள்களில்  பலதுறைசார் ...

காலத்தால் அழியாத தமிழ்நாடன்

கவிஞர் சேலம் தமிழ்நாடன் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை. சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர், இவரின் பெற்றோர். சிறு அகவையிலேயே பெரிய வாசகரானவர் தமிழ்நாடன். ...
image-72

தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !

- கவிஞர் இரா .இரவி எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! 'கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று '  திருவள்ளுவர் கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் ! கனியாக நல்ல தமிழ் எழுத்துககள் இருக்கையில் ! காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு ? பாலோடு நஞ்சு கலந்தால் பாலும் நஞ்சாகும் ! பழந்தமிழ் எழுத்தோடு வேறு கலத்தல் தீங்கு ...

ஆழ்மனத்தில் தமிழ் உள்ளது

- முனைவர் வெ .இறையன்பு, இ.ஆ.ப. தொகுநர் :  கவிஞர் இரா .இரவி தாய்மொழி என்பது ஆழ்மனதுடன் தொடர்புடையது. தமிழை நுகர , செம்மைப்படுத்திக்கொள்ள வந்துள்ளீர்கள் .தமிழில் மேன்மையும், புலமையும் பெறுவீர்கள். ஒவ்வொரு நொடியையும் அடர்த்தியாக்க முடியும். என்னை வளர்த்த குமுகாயத்திற்கு  எதையாவது செய்ய வேண்டும் நோக்கத்தில் இங்கு வந்துள்ளேன். அதனால்தான் மாணவர்களிடம் பேசவும் ஏற்பாடு செய்யச் சொன்னேன். ...
image-67

முப்பது நாள்களில் தமிழ்

அன்புடையீர், வணக்கம். தமிழம்.வலை உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்/ தமிழ் மழலையர்களுக்கும் தமிழ் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ...

தொல்காப்பிய விளக்கம்

- பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முன்னுரை நம் இனிய செந்தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகத்  தொல்காப்பியம் கருதப்படுகின்றது. தொல்காப்பியத்தின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். வடமொழிப் பாணினியின் காலமாம் கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கும், தென்மொழித் திருவள்ளுவரின் காலமாம் கி.மு.முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்ததாகும் தொல்காப்பியம் என்பதில் எட்டுணையும் ஐயமின்று. வடமொழியாளர் தமிழகத்தில் புகுந்த காலத்திலேயே ...
image-63

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 1

 வரலாற்று நோக்கு பழந்தமிழகத்தின் வரலாறு உலகிற்கு இன்றும் அறியபடாததாகவே உள்ளது. தமிழ் மக்கள்கூடத் தங்களின் வரலாறு குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றிற்கு முதன்மை அளிக்கப்பட வில்லை. இந்திய வரலாற்றாளர்கள் பழந்தமிழகம் குறித்து முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் பழந்தமிழக வரலாற்றை உணர்த்தக் கூடிய பொருள்கள் தங்களிடம் இல்லை எனக் கூறலாம். அவர்களுக்குப் பழந்தமிழர் ...