image-2495

இலக்குவனார் எழுதுகோல்-வீழாமல் காக்கும் ஊன்றுகோல்!

  மண்ணுக்கும் பொண்ணுக்கும் பொன்னுக்கும் போராடும் மாந்தரிடை மொழிக்காய்ப் போராடி, தமிழர் இனமானம் காத்தபேரா சிரியர் இலக்குவனார் தனக்கு இலக்கு தமிழர் முன்னேற்றம் காசுபணம் விலக்கி நேர்மைத் திறத்தால் மாசிலா மனத்தால் போராடும் குணத்தால் ஓரிடம் நின்று பணியாற்ற வழியின்றி வேறுவேறு ஊர்கள் தோறும் சென்று காலத்தை வென்று சாதனை படைத்தவர்! கால்பதித்த இடமெலாம் தன்தடம் பதித்தவர்! கன்னித் தமிழை உயிராய் மதித்தவர்! செல்லும் இடமெலாம் தமிழ்முழக்கம் செய்ததால் செல்லரித்த மனங்கள் மலர்ந்தன! ...
image-2474

சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி — ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014

தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014 ஆர்வலர்களுக்கு  அழைப்பு     தனித்தமிழ் இயக்கம் ஆண்டு தோறும் சிறுவர் பாடல் எழுதும் போட்டியை நடத்திப் பரிசு வழங்கி வருகிறது. அம்முயற்சியின் அடுத்த கட்டமாகச் சிறுவர் பாடல் எழுதும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்த விரும்புகிறோம். அனைவரும் நல்ல பாவலர்களே. பயிற்சி சிறந்தவர்களாக்கப் பயன்படும்.   இதில் சிறுவர் ...
image-2516

முதல்நூலும் முதல்வனும் – திருக்குறளார் வீ.முனுசாமி

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் ‘அனைத்தறன்’ ஆகுல நீர பிற. 2. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான். 3. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.   உலகின் பல்வேறு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள நூல்களுக்கெல்லாம் முதன்மையாக இருப்பது திருவள்ளுவர் அருளிய திருக்குறளாகும். காலத்தினால் சொல்லுவதென்பதல்லாமல், கருத்தினாலும் சொல்லப்படுவதாகின்றது.   உலகில் காணப்படுகின்ற நூல்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையினையே ...
image-2505

அமெரிக்கத் தீர்மானம் அமுது தடவிய நஞ்சு – வைகோ குற்றச்சாட்டு

     ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை அமுது தடவிய நஞ்சு எனக் கடிந்துரைத்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியசு ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமைக் குழுவில் மார்ச்சு 3 அன்று ஒரு தீர்மானத்தை அளித்துள்ளன. அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் ...
image-2511

கவிதை உறவு இலக்கியப் பரிசுப் போட்டி

 கவிதை உறவு இலக்கியப் பரிசுகள் பெற ஏப்பிரல் 10-ஆம் நாளுக்குள் புத்தகங்களை அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிப்பிரிவுகள் பரிசுகள் விவரம் வருமாறு:-  மரபுக் கவிதை  :  துரைசாமி(நாடார்) -இராசாம்மாள் நினைவுப் பரிசு புதுக்கவிதை : ஊர்வசி செல்வராசு நினைவுப் பரிசு மனிதநேயம்-வாழ்வியல் : சுப்பையா - தங்கம்மாள் நினைவுப் பரிசு சிறுகதை : சு. சமுத்திரம் நினைவுப் பரிசு இலக்கிய கட்டுரைகள் :  முனைவர் ...
image-2351

இலக்குவனார் விழா

  திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் இலக்குவனார் முப்பெருவிழாவினைச் சிறப்பாக நடத்தின.   மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  3 நாளும் தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் ...
image-2459

எழுவர் விடுதலைக்காக மனித நேயர் எழுவர்! சட்ட எதிர்ப்பர், எதிர்ப்பர்!

  இராசீவு  கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகச் சிக்க வைக்கப்பட்ட எழுவரின் மரணத் தண்டனை வாணாள் தண்டனையாக மாற்றப்பட்டு விடுதலையும் அறிவிக்கப்பட்ட சூழலில் காங். அரசு இடைக்காலத் தடை பெற்றுள்ளது.   எழுவரின் உடனடி விடுதலையை உலகெங்கும் உள்ள மனித நேயர்கள் வரவேற்கின்றனர். விடுதலைக்கான தடைக்கு எதிராக அறவழிகளில் போராடி வருகின்றனர். அதே நேரம் ...
image-2312

செய்திக்குறிப்புகள் சில

    ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. நீதித்துறை முதல் அனைத்து மட்டங்களிலும் ஊழலில் தாண்டவமாடும் இந்தியா: அமெரிக்க  நாடாளுமன்றில்அறிக்கை     இந்தோநேசியாவில் காநீர்ப்பழத்தை உண்ணும் புனுகுப்பூனையின் கழிவில் வெளியேறும் கொட்டையிலிருந்து உருவாக்கப்படும் காநீர் : 1 குவளை 5,000 உரூபாய் நிதி முறைகேடு தொடர்பாகச் சீக்கிய அமைப்புக்கள்  தொடுத்த வழக்கில் இந்தியத் தலைமையாளர் மன்மோகனுக்கு  அழைப்பாணை அனுப்பியுள்ளது அமெரிக்க நீதிமன்றம் ...
image-2309

குறள் நெறி பரப்புக ! – புலவர் இரா. இளங்குமரன்

  1. தமிழன் பெருமை உரைத்ததற்குத்                 தக்க தேதும் உண்டேயோ? அமுதும் எந்தம் மொழி என்றால்                 ‘‘ஆ ஆ’’ உலகில் எத்துணைப் பேர் அமுத மொழியின் திளைக்கின்றார்?                 அளக்க வேண்டாம்’’ எனச் சொல்லி உமிழாக் குறையாய்ப் பழிக்கின்றார்.                 உள்ளம் நைய அம்மம்மா! 2. ‘‘ஆண்ட மொழியெம் மொழி’ என்றால்                 அழகாம் உங்கள் மொழி’யென்று மாண்ட மொழிக்காய் வாழ்வாரும்                 மட்டம் தட்டப் பார்க்கின்றார்; ஆண்டு வந்த அன்னியரோ                 ...
image-2307

திருக்குறள் வாழ்க்கை நூல் – அறிஞர் முகம்மது சுல்தான் கலை.மு.,சட்.இ.,

   வாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள. அவைகளுள் மூன்று நூல்கள், அவைகளை இயற்றியவர்களின் அறிவுத்திறத்தையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தாங்கள் எழுதியிருப்பவைகள் எல்லாம் வல்ல கடவுளின் நாதம் அல்லது தொனி அல்லது வெளிப்பாடு என்று இந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் ...
image-2303

விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உரோம்:         இத்தாலியில் கடந்த 2008–  ஆம் ஆண்டு தமிழ்ச் தேசிய செயல் வீரர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி  திரட்டி வழங்கினர். இது பன்னாட்டுப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது எனத் தமிழ்த் தேசிய செயல்வீரர்கள்  தளையிடப்பட்டனர். அவர்கள் மீது கடந்த 2010–ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011–ஆம் ஆண்டில்  ...