image-3148

குயில் பிரிந்த கூடு – புலவர் இரா இளங்குமரன்

1.குயில்பிரிந்து போய்விட்ட கூடே அம்மா! குளிர்மதியம் மறைவுற்ற வானே அம்மா! பயிர்கருகிப் பசையற்ற வயலே அம்மா! பறையின்றி நடைபோடும் படையே அம்மா! உயிரமுதாம் நரம்பறுந்த யாழே அம்மா! ஓடியுண்டு போகப்பட்ட வாளே அம்மா! பயிலுணர்வுப் பாவேந்தன் பிரிந்துபோன பைந்தமிழ்ப் பாவுலகம் ஐய ஐயோ! 2. நெஞ்சத்தில் பட்டவெலாம் கற்கின்றோர்கள் நெஞ்சத்தில் படுமாறு நேர்மையாகச் செஞ்சொற்கள் கொண்டுரைக்க வல்லோன் யாவன்? செழுந்தமிழே பேச்சாக மூச்சும் ஆகக் கொஞ்சற்கும் கெஞ்சற்கும் வன்கண்மைக்கும் குலையாமல் தளராமல் தமிழைக் காத்த அஞ்சாத ...
image-3145

எவரிடம் காண்பது …. – கவிஞர் இளங்கம்பன்

அருந்தமிழ்த் தாயுவக்க அளப்பரும் பணி பரிந்தோய்! பெரும்பகை முகில் கிழித்து பேரொளி தந்த வீர! இருபதாம் நூற்றாண்டிற்கோர் இணையிலாக் கவிஞரேறே! அருவிபோல் எமக்(கு) இனித்த அரசே நீ மறைந்தாயாமே! குன்றுபோல் நிற்குமுன்றன் கோலத்தை; மாற்றறார் சூழ்ச்சி ஒன்றுக்கும் ஆட்படாத உறுதியை, புரட்சிப் போக்கை, கன்றுக்குத் தாய்போல், கன்னிக் கவிஞர்பால் குழையும் மாண்பை என்றினிக் காண்பதையா! எவரிடம் காண்பதையா? - குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
image-3179

தனித் தமிழ்ப் படையின் தளபதி – நெல்லை க.சொக்கலிங்கம்

  தமிழ் தொன்மையும் தோலாப்புகழும் மிக்கதொரு மொழியாம் இனிமையும் எளிமையும் கொண்ட செந்தமிழ் தனித்தியங்கும் தகைமையும் தகுதியும் பெற்ற பண்பட்ட மொழி என்று கால்டுவேலர் போன்ற மேனாட்டார் ஏற்றிப் போற்றும் கூற்றினை மேற்கொண்டு தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு தமிழ் மாற்றாரின் படை எடுப்பால், வேற்று மொழிகளின் தாக்குதல்களால் புறக்கணிக்கப்பெற்றுப் போற்றுவாரற்றுக் கிடந்த காலத்தில்தான் ...
image-3142

கண்ணீர்ப் பெருக்கினைக் காண் – கவிஞர் முத்தன்

  கத்து கடல்சூழ் புதுவைக் கருங்குயிலே! புத்தமுதப் பாடற் பொழிவாய் நீ - இத்தரையில் மொத்த புகழ் ஒத்தவிசை எத்தனையோ அத்தனையும் நத்திச் சுவைத்தாய் நன்று. பாடும் இசைக்குயிலே. பாரதி தாசனே! தேடு சுவைபடைத்த தேன்பொழிலே! கூடு துறந்து தமிழ்ச்சோலை சுற்றறுத் தேனோ பறந்தாய் மறைந்தாய் பகர்! கானக்குயிலே! கனித்தமிழின் இன்சுவையே மோனப் பெருந்துயிலின் மூழ்கியதேன்? -ஞானத் திருவிளக்கே பாவுலகில் தேடினும் உன்போல் ஒருவிளக் குண்டோவுரை! பாட்டுத் திறத்தாலே பைந்தமிழைக் காக்கும் - மாங் காட்டுக் ...
image-3176

பேரிழப்பு – முத்தமிழ்க் கவிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்

  கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய இழப்பு, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழகத்திற்கும் நேர்ந்த ஒரு பேரிழப்பு. அதுவும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அடுத்தடுத்து நல்லறிஞர்கள் பலரை தமிழகம் இழந்து வருவது பெரிதும் வருந்தத்தக்க ஒன்று.   பாரதிதாசன் அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞன். அவர் இளமையிலேயே தமது ஆசிரியர் தொழிலையும் கைவிட்டு ...
image-3138

பைந்தமிழ் போற்றிய பாவேந்தர்

பெயர் - ஊர் - பெற்றோர் : பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். புதுவை (புதுச்சேரி)யில் பெருவாணிகரான கனகசபை (முதலியாரும்(, இலக்குமி (அம்மையாரும்( இவரின் பெற்றோர்கள். புனைபெயரும், காரணமும்: இவர் புனைபெயர் ‘பாரதிதாசன்’ என்பது. மதுரையில் ‘தேசோபகாரி’ என்ற நாளேட்டில் முற்போக்குக் கொள்கைப் பற்றிப் பாட்டு எழுதி வந்ததைப் புதுவை அரசு எதிர்த்தது. இவர் அரசினர் ஆசிரியர் ...
image-3135

தமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்!

 தமிழ்நாட்டின் தலைமைப் பதவிகளிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழரல்லாதார் அமர்த்தப்படுவதே மரபாக உள்ளது. அந்த வகையில் புதிய தலைமைச் செயலராகத் திரு மோகன் வருகீசு சுங்கத்து இ.ஆ.ப.  (Mohan Verghese Chunkath, I.A.S.) தலைமைச் செயலராக அமர்த்தப்பட்டு பங்குனி 18, 2045 / ஏப்பிரல் 1, 2014 அன்று பொறுப்பேற்றுள்ளார்! தமிழ்நாட்டு மருகரான அவரைத் தமிழ், தமிழர் நலனுக்குப் ...
image-3132

திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு

  மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார். “தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல்-தொல்லியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.செயக்குமார்  கள ஆய்வுமேற்கொண்டார். அப்பொழுது ...
image-3124

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

   தமிழ் மொழித் திங்கள் விழாவின் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏப்பிரல் 5, 2014 அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியது.   தமிழ் வாழ்த்துடன்  விழா தொடங்கியது. சிங்கப்பூர் சுற்றுப்புற நீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருட்டிணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அடுத்த ...
image-3117

வளைகுடா வானம்பாடிகளின் ஏப்பிரல் கூட்டம்

      குவைத் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 11-04-2014 வெள்ளி அன்று மாலை 5.00 மணி முதல் மங்கப் விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக  திரு.நீலமணி, திரு.பால் மனுவேல் திரு. அரவணைப்பு இளங்கோவன் ஆகிய மூன்று முனைவர்கள் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். வழக்கம் போல் மண்ணிசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், தனிக்கவிதை ...
image-3113

இணைவதை யாராலும் தடுக்க முடியாது – கலாநிதி இராம் சிவலிங்கம்

புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது -- கலாநிதி இராம் சிவலிங்கம்     விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகைமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து  செயற்பட வருமாறு ...
image-3092

மாமூலனார் பாடல்கள் – 14 : சி.இலக்குவனார்

 (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) கச. மொழிபெயர் தேயத்தராயினும்  நல்குவர் - தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  ( பிரிவின்கண் வேறுபட்டுள்ள தலைவியும் தோழியும்)  தோழி: ஏடி! இவ்விதம் வாட்டமுற்று வருந்துகின்றாய். மேனி பொலிவு அழிந்துவிட்டதே.  தலைவி: நீகூட இதன் காரணத்தைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளாயோ?  தோழி: ...