eezhaththaay01

ஈழத்தாயே பொறுத்திடு,
தாயகம் மீட்டெடுப்போம் சற்றே பொறுத்திடு!
தமிழரை ஒழிக்கும் சிங்களத்தின் செய்கை,
நீண்டகாலம் நீடிக்காது,
நிலைத்து நிற்போம் தமிழர் நாம்!

முள்ளிவாய்க்கால் முடிந்ததாம், போர் தீர்ந்ததாம்,
இலங்கை வென்றதாம், தமிழர்க்கு விடுதலையாம்,
ஆயினும் எம்வாழ்வில் தேற்றமில்லை,
சுதந்திரமாய் வாழ இங்கு வழியும் இல்லை!

சிங்களத்தின் குடிகள் சொகுசாய் எம் வீட்டினுள்,
நாங்களோ வாழ வழியின்றி வீதியில்!
எம்பெண்களை வற்புறுத்தி இராணுவத்தில் வேலை,
தாயாவதைக்கூட தடுக்கும் ஈரமற்ற இன ஒடுக்கம்!

ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவின் நட்பில்,
அமெரிக்காவின் பார்வையிலோ இலங்கையில் சமாதானம்!
கேட்பார் யாருமில்லை அநாதையாய் நிற்கின்றோம்,
இருந்தும் கவலையில்லை எம் சகோதரர் உலகெல்லாம் உள்ளர்!

எம்முரிமை மீட்டிடவே வழியொன்று செய்திடுவார்!
ஆயுதமின்றியும் எம்தேசம் எப்படியும் மீட்டிடுவார்!
ஈழத்தாயே உன்பிள்ளைகள் மறுபடியும் வந்திடுவோம்!
எம்தேசக்கொடி-கொண்டு ஈழத்தை ஆண்டிடுவோம்!

ஈழத்தாயே சற்றே பொறுத்திடு

eezhaththaay02

நன்றி : http://www.lankasripoems.com/?conp=poem&poetId=196565&pidp=212039