sanganuulgal02

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள் சங்கமாகக் கூடித் தமிழைப் போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொலை நூல்களைக் கொண்டது. இவை, படிப்போர் உள்ளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் துணை செய்வன. இவற்றைப் பொருள்வகையானும் திணை வகையானும் பாவகையானும் அடி வகையானும் பகுத்துத் தொகுத்தனர் நம் முன்னர்.  இவற்றை இயற்றிய புலவர்களின் பெயர் தெரிந்தவர் நானூற்று எழுபத்து மூவர். பெயர் தெரியாதவர்களும் சிலர் உளர்.

– செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்: பக்கம். 7

ilakkuvanar+12