சங்க இலக்கியத்தில சமுதாயக் காட்சிகள் – ப. சீவானந்தம்
சங்காலப் பாடல்கள் கற்பனை ஆதிக்கம் கொண்டவை அல்ல. எதார்த்ததில் ஊறி நிற்பவை.
அந்நாள் வாழ்க்கையும் இன்று போல் சிக்கலான வாழ்க்கை அல்ல . இயற்கையோடு இயைந்த எளிய சிக்கல் குறைந்த வாழ்க்கை.
“வள்ளுவனின் கருத்துப் புரட்சியை இன்றைய உலகத்தில் தலைசிறந்த தத்துவஞானிகளுள் பெருமதிப்புப் பெற்றுள்ள ஆல்பர்ட்டு என்ற சிந்தனையாளர் தமது “இந்தியச் சிந்தனையும், அதன் வளர்ச்சியும்” ((Indian thought and its development) என்ற ஆராய்ச்சி வல்லநூலில் பிரமாதமாகப் பாராட்டுகின்றார். வேத கால இரிசிகளோடும், உபநிடத முனிவர்களோடும், கீதை ஆசிரியன் கண்ணனோடும் வள்ளுவனை ஒப்புநோக்கி வள்ளுவன்போல் மற்ற யாரும் மனித வாழ்வை அத்துணை உறுதிப்படுத்தி கூறவில்லை என்று முடிவுகட்டிச் சொல்கிறான்.
வள்ளுவனுக்கு நிகரான ‘கூட்டுமேதை’ (Synthetic Genius) அக்காலத்திலும் பூவுலகெங்களிலும் துருவித் துருவி நோக்கினும் விரல் விடு எண்ணுமளவுக்குக்கூடக் கிடையார் என்பதே எனது கருத்து.
நிலத்திற்கு உரியவரை அல்ல; நிலத்து உழுது வாழ்பவரைப் உண்டு பெருமைப் படுத்தும் ‘உழவே தலை’ என்று அறுதியிட்டு உ றுதி கூறுவதும் வள்ளுவன் பாட்டாளி மக்களை கொண்டாலும் பாவலனே என்பதனையும் தமிழினது பண்பாடு பாட்டாளிக்கு நன்மதிப்பு செலுத்துவதே என்பதையும் பட்டபகல் வெட்ட வெளிச்சமாக்குகின்றது.
– ப. சீவானந்தம்
(படங்கள் நன்றி: க.பூரணச்சந்திரன் வலைப்பூ)
Leave a Reply