தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு
தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு – இலக்குவனார் திருவள்ளுவன் கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நல்கைக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார். 06.01.22 அன்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்குத் தொடர் செலவினமாக உரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது நேற்று…
மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!,இலக்குவனார் திருவள்ளுவன்
சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்! மின்னம்பலம் மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. “தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம்…
மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள்/ அவரது சட்டமன்றப் பணி மணி விழா, தி.மு.க.வால் நடத்தப்பட்டுள்ளது. செயல்தலைவர் தாலின்(இசுடாலின்/ஃச்டாலின்) அனைத்து இந்தியத் தலைவர்களை அழைத்துச் சிறப்பாக நடத்தியுள்ளார். விழாவில் கனிமொழிக்கு முதன்மை அளிக்காததன் காரணம், விழாவின் பெருமையில் யாரும் பங்கு போடக்கூடாது என்ற எண்ணம்தான். அவர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்வரை இந்த எண்ணம் இருக்கும். எனவே, இதனை அரசியல் அடிப்படையில் தவறாகக் கருத இயலாது. மேடையில் தமிழகக் கூட்டணித் தலைவர்களை மேடையேற்றாததன் காரணம்…
மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ – புகழேந்தி தங்கராசு
மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்! வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் “விரைவில் தி.மு.க., ஆட்சி” என அச்சுறுத்தியபடியே இருக்கிறார் மு.க.தாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரை, கோபிநாத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்ட பன்னீர்செல்வம் – சசிகலாவின் ‘நீயா நானா’ வுக்கு இடையே ஒலித்த தனி இசை – தாலினின் குரல்தான்! 8 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற வளாகம் குருதிச் சேறாக்கப்பட்ட பிப்பிரவரி 19 நெருங்குகிற நிலையில் தாலின் இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்கும்பொழுதே குலை நடுங்குகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீதே அனைவரது கவனமும் பதிந்திருக்கும் நிலையில்,…
செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(மாசி 18, 1984 / மார்ச்சு 01, 1953) செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின். தன் பதினாறாம் அகவையிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்தார்; கட்சியில் படிப்படியாகப் பல முன்னேற்றங்களைக் கண்டார். தந்தையின் ஒத்துழைப்பால் இவர் வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலர், துணைப்பொதுச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார். வேறு உயர் பதவிக்கு வர விழைந்தும், தந்தையின் இப்போதைய உடல்நிலையில் தி.மு.க.வின் செயல்தலைவராக உயர்ந்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு…