ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணையென்றும், அஃறிணையென்றும் பகுத்தோதினார்.   எம் அரிய நண்பர்கள்! இப்பாகுபாட்டின் அருமையும் நுட்பமும் நாமுணராதிருக்கின்றோம். பிறமொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக் கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியிலெழுதப்பட்ட இலக்கண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் அற்றின்கண் இவ்வுரிமையை பெரிய இலக்கணப் பாகுபாடு ஒரு சிறிதுங் காணப்படாது, அன்றி, இந்திய நாட்டிற் சீர்த்தி பெற்ற மொழியாய்ப் பயிலப்படும் வடமொழியிலேனும் இம்முறையுண்டோ வெனின் ஆண்டும்…