ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்!
ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்! மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனச்சான்றுள்ள எவராலும்…
சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் – வெளியீடு
புரட்டாசி 29, 2046 / அக்.16, 2015 மாலை 5.00 கோயம்புத்தூர்
பன்னாட்டு ஏதிலியர் நாள் (World Refugee Day 20-06-2015) – ஈழம் இரஞ்சன்
பன்னாட்டு ஏதிலியர் நாள் வீடு இல்லை… நாடு இல்லை…விதிவிட்ட வழியா? இன்றைய நாட்களில் உலகில் 7.6 பேராயிரம்(மில்லியன்) மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும். இருப்பிடமற்று உலகமெங்கும் ஏதிலிகளாக ஈழத்துமக்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அண்மையில் ஐ.நா வெளியிட்ட சில தகவல்கள் உலகின் கையறு அரசியல் நிலையைக் காட்டுகின்றது. 7.6 பேராயிரம் மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடுவதுடன், 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகுதியானஅளவு ஏதிலிகள் எண்ணிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐ.நாவின் ஏதிலியருக்கான…
அகதிகள் அனாதைகள் அல்லர்!
எதிர்வரும் சனி ( 28.06.ஆனி 14, 2045 / 2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி ஏதிலியர் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! உலகம் முழுவதும் அவலத்துள்ளும் அச்சத்துள்ளும் வாழும் ஈழத் தமிழ் ஏதிலியர் திட்டமிட்டு இலங்கையை நோக்கிக் கடத்தப்படுகின்றனர். மலேசியாவிலிருந்து ஏதிலியராக ஏற்கப்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டனர். பிரித்தானியா,பிரான்சு, செருமனி,கனடா போன்ற நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஏதிலியரின் நிலை கேள்விகுறியாகியுள்ளது. இவற்றைக் கண்டித்து தமிழ் ஏதிலியருக்கான போராட்டக்குழு ஐக்கிய நாடுகளுக்கான ஏதிலியர்…