அகத்தியர் என்ற சொல் தமிழே! – அ.சிதம்பரனார்
அகத்தியர் என்ற சொல் தமிழே! அகத்தியர் என்ற சொல்லை அகத்தியம் என்ற வடசொல்லின் திரிபு என நம் நாட்டில் பலர் நம்பி வருகிறார்கள். அகத்தியம் என்பது அகத்தி என்ற ஒரு கீரைவகைப் பெயரின் அடிப்படையில் தோன்றியது ஒன்றாம். தமிழில் அகத்தி என்பது இருத்தல் போலவே மலையாளத்திலும் அகத்தி என்ற சொல் உண்டு. செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரனார்: தமிழோசை: பக்கம்.48
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே! – அகத்தியர்
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே; எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே; எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம் அகத்தியர்: பேரகத்தியத் திரட்டு