பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான்- பாண்டியன்
பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான் எனப் பாண்டியன் மூலம் நிறுவிய இறைவன் பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டில் காணப்பட்டனர்; பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட பாண்டியன், “என்னை! எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம்” எனக் கவன்றான் என்றும், இறையனார் அகப்பொருளுரையில் ஒரு வரலாற்றுக் கதை வருகின்றது. பின்…