மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 3 ஆரிய மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை இடைக்காலத்தில் திருஞானசம்பந்தரே ஆரியச் சடங்குகளைத் தவிர்த்துத் தமிழ் மறை ஓதிச்சடங்கு செய்து கொண்டார் அல்லவா? அவ்வாறிருக்க சங்கக்கால இறுதியில் மட்டும் ஆரியச்சடங்குகளைச் செய்திருப்பார்களா? ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்…
ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
(வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 – ஆடி 22, 2049 / ஆகத்து 07, 2018) தி.மு.க.வரலாற்றின் பெரும்பகுதியாகவும் தமிழக வரலாற்றின் சிறப்புப் பகுதியாகவும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்கும் ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எண்ணம், சொல், எழுத்திற்கு ஓய்வுகொடுத்ததுடன் இயக்கத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துயரத்தில் பங்கேற்கும் அகரமுதல மின்னிதழ் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார்…