வேண்டாமே இந்தப் ப(பு)கை! – அகரம்.அமுதா
வேண்டாமே இந்தப் ப(பு)கை! நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப் புகைக்கிடங் காதல் புதிர்! வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை நம்புகையில் வீழும் நலம்! நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல் தகையில்லை வேண்டும் தடை! காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும் கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்! புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர் பகையில் புகையே பகை! சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின் பொறியைந்தும் பாழாம் புரி! பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும் புற்றுவைக்கும் வேண்டாம் புகை! …