சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 936. Assistant உதவியாளர் அமைச்சுப்பணியில் கீழ்நிலையில் இருந்து இரண்டாம் நிலையில் – இளநிலை உதவியாளருக்கு மேல் நிலையில் உள்ள பணியிடம். சட்டத்துறையில் சட்ட உதவியாளர் அல்லது வழக்கு உதவுநர் எனக் குறிக்கப் பெறுகிறார். சட்ட ஆவணங்களை ஒழுங்கு படுத்தல், விசாரணையில் உதவுதல், சான்றுரைஞர்களிடம் நேர்காணல் மேற்கொள்ளல், வழக்குரைஞருக்கும் வழக்காளிக்கும் தொடர்பாளராக இருத்தல் முதலான பணிகளைப் பார்க்கிறார். ஒரு…
சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 931. Association கூட்டு இயைபு ஒன்று சேர் அமைப்பு கூடுதல், இணைதல், சேர்த்தல், சங்கம், கழகம், குழாம் தோழமை, நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு எனப் பல பொருள்கள். சட்ட அடிப்படையில், ஒரு சங்கம் என்பது ஒரு பொதுவான நோக்கம் அல்லது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்வோரின் குழுவாகும். இது மற்றொருவருடன் தொடர்பு கொள்வது அல்லது…
சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930 926. assistance, seek; seek assistance உதவி நாடல் பொதுவாக தேவைப்படும் உதவியை நாடுவதைக் குறிக்கிறது. எனினும் புதியனவற்றைக் கற்றுக் கொள்வதில் அல்லது புரிந்து கொள்வதில் அறைகூவல்களைச் சந்தித்தல் அல்லது உறுதியற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் போது முன் முயற்சி உதவியை நாடுவது. உதவி நாடல் என்பது தேவைப்படும் உதவியை புரிந்து அறிந்து கொள்ளுதல், யாரிடம் உதவியை நாட வேண்டும் எனத்…
சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 921. assistance, receive; receive assistance ஏற்கை உதவி பெறுகை உதவி கைக்கொள் உதவி உதவி பெறல் உதவி ஏற்றல் சட்ட அடிப்படையில், உதவி பெறுவது என்பது வழக்கில் வழக்கறிஞரை அமர்த்த முடியாத பொழுது இலவயச் சட்ட உதவியை ஏற்பதாகும். வழக்கு நுட்பம் சாந்த சட்ட அறிவுரைகளைப் பெறலையும் குறிக்கும். 922. assistance, render…
சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 916. assistance, need; need assistance உதவி தேவை தேவை உதவி பணியில் அல்லது ஒரு சூழலில் உதவி அல்லது ஆதரவு தேவை எனக் கேட்பதையும் அவ்வாறு உதவி தேவையா எனக் கேட்பதையும் குறிக்கிறது. இவ்வாறு உதவி வேண்டுமா எனக் கேட்பது ஒரு கண்ணியமான வழி. தனியர், குழு, மக்கள், நாடுகள் முதலியன ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கும்போது …
சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 911. assistance international/International assistance பன்னாட்டுதவி பன்னாட்டு உதவி ஒரு நாட்டிற்குப் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள். பன்னாட்டு உறவுகள் மூலமும் பன்னாட்டவை( UNO), பன்னாட்டுப் பண நிதியம் (International Monetary Fund) போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமும் கிடைக்கும் உதவிகள். 1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டுக் காவல் துறை(The International Criminal Police…
சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 906 – 910 906. assistance,food./Food assistance உணவு உதவி அரசாங்கம், தன் நாட்டு மக்களுக்கான பசியைப் போக்க உதவுதல், நாட்டில் உள்ள சிறாரின் உணவுத்தேவையை நிறைவேற்ற உதவுதல், பள்ளி மாணவர்களின் பசியைப் போக்க உதவுதல், நண்பகல் உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், 60 அகவைக்கு மேற்பட்ட முதியோரின் பசியைப் போக்க உதவுதல், இலவச உணவு அளித்தல், சலுகை விலையில் உணவு அளித்தல்,அரசுடன் இணைந்தோ தனித்தோ தனிப்பட்ட அமைப்புகளோ…
சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905
(சட்டச் சொற்கள் விளக்கம் 896-900, தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905 901. assistance, employee / employee assistance பணியாளர் உதவிபணியாளர்க்கு உதவுதல் தொழிலாளர்களின் பணிமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் முதலாளிகளால் தரப்படும் உதவி. தொழிலாளர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் தொழிலாளர் ஆணையத்தால் வழங்கப்படும் நிதியுதவி முதலான உதவிகள். தொழிலாளர்களுக்கு ஆற்ற வேண்டிய உதவிகளைச் செய்யாவிட்டால் அதுவும் குற்றமாகும். 902. assistance, Enlist/ Enlist assistance உதவி பெறுஆதரவு பெறு படையில் சேர்த்திடுபடையில் இடம்பெறுபட்டியலில் இணைத்துக்கொள்சேர்இணைவுறுஆள்சேர்படைக்கு வீரர் திரட்டுதுணையாகப்பெறுஎய்தப்பெறுபயன்படுத்துஈடுபடுத்துபுகுந்தீடுபடு பணி வளங்களைப்…
சட்டச் சொற்கள் விளக்கம் 896 – 900
(Explanation of Legal Terms 891-895 continued) சட்டச் சொற்கள் விளக்கம் 896-900 896. Assistance உதவி; உதவுதல்; துணை உதவி என்பது ஒரு செயலுக்கு உதவும் நிலையைக் குறிப்பது. துணை என்பது அதிகாரத்திற்கு அடுத்த நிலையில் இருந்து அல்லது அதிகாரத்தலைமைக்குப் பகரமாகத் துணை நிற்பதைக் குறிப்பது. aid என்பது இலவச உதவியைக் குறிப்பது. எ.கா. legal aid இதனை நாம் உதவுமை எனலாம். உதவி பலவகைப்படும். அவற்றை அடுத்துப் பார்க்கலாம். 897. assistance, consular /consular assistance தூதரக…
சட்டச் சொற்கள் விளக்கம் 886 – 890: இலக்குவனார் திருவள்ளுவன்
சட்டச் சொற்கள் விளக்கம் 881-885-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் 886 – 890 886.Assessment மதிப்பீடு தீர்வை விதிப்பு ஏதாவதொன்றின் விகிதத்தினை அல்லது தொகையினைத் தீர்மானித்தல். எடுத்துக் காட்டாக இழப்பீடு அல்லது விதிக்கப்பட்ட ஒறுப்புத் தொகை. குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டவரின் உள நிலைமை குறித்துத் தகுதி வாய்ந்த வல்லுநர் ஒருவர் தீர்மானித்தல். குடும்பநல வழக்குகளில் தகுதியான வல்லுநர் ஒருவர் சிறாரின் தேவையையும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான தரப்பினரின் ஆற்றலையும் ஆராய்ந்து மதிப்பிட்டு அறிவிக்கும் பகுப்பாய்வு அறிக்கை. குடியியல் வழக்குகளில் சொத்தினைப் பேணவும் தனிப்பட்ட நலன்…
சட்டச் சொற்கள் விளக்கம் 881-885:
(சட்டச் சொற்கள் விளக்கம் 876-880 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 881-885 881. animus manendi தங்குகை நோக்கம் நிலை இருப்பிட நோக்கம் ஓரிடத்தில் காலரையறையின்றித் தங்கி அவ்விடத்தைத் தன் நிலையான இருப்பிடமாக ஆக்க எண்ணும் அகநிலை நோக்கமாகும். animus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள், உணர்வு, மனம், துணிவு, சினம் முதலியன. இச்சொல் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் குறிக்க மற்ற சொற்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. manendus என்னும் சொல்லில் இருந்து உருவான வடிவமே manendi என்பது. இதன் பொருள் இருத்தல்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 871. alternative dispute resolution பிணக்குத் தீர்வு மாற்று வழி பிணக்கு ஏற்படும் பொழுது நீதிமன்றம் செல்லாமல் வேறு வழிகளில் பிணக்கைத் தீர்த்துக் கொள்ளும் வழி. நடுநிலை இணக்குவிப்பு, சேர்ந்து முடிவெடுக்கும் குடும்பச்சட்டம் முதலியன மாற்று வழிகளாம். 872. alternative இரண்டில் ஒன்றான, மாற்றுவழி, ஒன்றுவிட்டு ஒன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒன்றுக்கு மாற்றாக அமையும் வாய்ப்பு. 873. Alternative plea…