உலகாய்தத்தை உணர்த்த உம்பர் உலகு சென்றாரோ பேரா.க.நெடுஞ்செழியன்!
பேரா.க.நெடுஞ்செழியன் மறைவு! தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று வைகறை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79. தமிழறிஞர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தமிழ் மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல், தமிழர் சமயம் ஆகிய துறையினரால் போற்றப்பட்டவர். ஆசீவகம் பற்றிய இவருடைய ஆய்வு தமிழாய்வு உலகில் மிகவும் முதன்மையானது. திருச்சி மாவாட்டம், இலால்குடி வட்டத்தில் உள்ள படுகை ஊரில் 15.06. 1944-இல் பிறந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று திருச்சியில் உள்ள ஈ.வே.இரா பெரியார்…