புதுதில்லியில் தமிழக இளைஞருக்குச் ‘சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர்’ விருது
“ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது புதுதில்லியில் “உலகளாவிய பேரரசு நிகழ்வுகள்(Global Empire Events)” என்ற அமைப்பின் சார்பில் “ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அசன் முகம்மதுவுக்குச் “சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசியக் கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணிக் கணிய(மென்பொருள்) நிறுவனங்களைச் சேர்ந்த முப்பத்து எண்மரில் சிறந்த ஒருவராக அசன் முகம்மது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த…