மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 – கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 இந்தியாவில் மட்டுமன்றி பிரான்சு நாட்டில் இயங்குகின்ற பேரவைதான் அசாம் தன்னில் சந்தமிகு துவக்கவிழா காணு கின்றோம் சார்ந்திருக்கும் மேகாலய மாநி லத்தில் நந்தமுடன் நாளையங்கே துவக்கு கின்றோம் நன்றாகப் பேரவைதான் வளர்வ தாலே சிந்தனைகள் ஒன்றாகி உலக மெல்லாம் சிறப்பாக நட்புறவோ ஓங்கும் நன்றாய் ! வெற்றுரைகள் அமர்ந்துபேசி கலைவ தன்று வேதனைகள் தீர்க்கின்ற செயல்கள் செய்து நற்றொண்டாய் கல்விகற்க இயலா ஏழை…
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 – கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 அமைச்சரினை வரவழைத்து இதயா ரிசுவி அரும்விருதை ஒட்டமா வடியில் தந்தே எமையெல்லாம் பெருமைசெய்த சிறப்பெல் லாமே எமையிணைத்த பேனாவின் நட்பா லன்றோ அமைதியான கொட்டகலா மலையின் ஊரில் அமைந்திருக்கும் கல்லூரி தனில மர்த்தி எமையெல்லாம் சிறப்பித்த சுமதி என்னும் எழிற்கவிஞர் நட்பெல்லாம் பேனா வாலே !! நல்லமுத பேனாநண்பர் பேரவை யாலே நல்லவர்கள் பன்னூறு நட்பாய் ஆனார் சொல்லமுத உரைகளாலே நெஞ்சை …
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 நேரினிலே நான்பார்க்கா நாட்டி லெல்லாம் நேரியநல் நண்பர்கள் இருப்ப தெல்லாம் பாரினையே பேனாக்குள் அடக்கி யெங்கும் பார்க்கவைக்கும் அஞ்சல்தம் அட்டை யாலே ஊரினையே கடக்காத பெண்கள் கூட உலகத்தின் மறுகோடி பெண்க ளோடே சீரியநல் நட்புதனை வளர்த்துக் கொண்டு சிறந்தறிவு பெறுகின்றார் பேனா வாலே ! சிங்கப்பூர் தனைநேரில் பார்க்கா முன்பு சிறப்பான மலேசியாவைப் பார்க்கா முன்பு சிங்களரால் தமிழுறவு சிதைந்து …
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று 1/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 கற்பனைக்கும் எட்டாத அற்பு தங்கள் கரத்திருக்கும் பேசியிலே செய்யும் நாமோ நற்காலம் காட்டுகின்ற கடிகா ரத்தை நாள்காட்டி கணக்கியினை துறந்து விட்டோம் பற்றியெங்கும் எடுத்துசென்று செய்தி யோடு பாடல்கேட்ட வானொலியைத் தொலைத்து விட்டோம் நற்றமிழில் நலம்கேட்டு எழுதி வந்த நற்கடிதப் பழக்கத்தை விட்டு விட்டோம் ! பக்கத்தில் பெற்றோர்கள் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் உடன்பிறந்தோர் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் சுற்றத்தார் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் …
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 1/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 1/5 தொலைபேசி வருமுன்பு நெஞ்சி ருக்கும் தொலைதூர உறவோடு தொடர்பு கொள்ள மலைகடந்து பறக்கின்ற புறாவின் காலில் மனக்கருத்தைக் கட்டியன்று அனுப்பி வைத்தார் அலைகடலைக் கடந்தின்று இருப்போ ரோடே அறிவியலால் மின்னஞ்சல் முகநூல் தம்மில் வலைத்தளத்தில் கட்செவியில் கையால் தட்டி வார்த்தையாக்கிக் கண்களிலே பேசு கின்றார் ! எத்தனைதான் முன்னேற்றம் வந்த போதும் எழில்கிராமப் பச்சைவயல் அழகைப் போல சித்தத்தை மயக்குகின்ற சேலை தன்னில் சிரிக்கின்ற அத்தைமகள் முகத்தைப் போல முத்தான கையெழுத்தில் அன்பைக் கொட்டி முழுநெஞ்ச …