தங்கர்பச்சானின் ‘சொல்லத்தோணுது’ நூல் வெளியீடு
பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015 காலை 10.30 வெளியீடு: உ.சகாயம் இ.ஆ.ப. பெறுநர்: மேனாள் நீதிபதி சந்துரு ஆண்டு முழுவதும் நான் தமிழ் ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய அரசியல்,சமூகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா; தங்கள் வருகை எனக்கு மகிழ்வைத்தரும். மிக்க நன்றி! -தங்கர்பச்சான்
சேரர் – சொல்லும் பொருளும்: மயிலை சீனி.வேங்கடசாமி
சேரர் – சொல்லும் பொருளும் இராமாயணக் காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும்போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார். கிரேக்கத் தூதரான மெகசுதனீசு என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார். திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும்…