தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன!

தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது  வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன :  – முன்னாள் போராளி சான்றுரை  இனப்படுகொலைப் போரின் பின்னரான  மறுவாழ்வின்போது தமக்கு  வேதிய(இரசாயனம் கலந்த) உணவுகள் வழங்கப்பட்டதோடு  ஐயத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சான்றுரைத்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும்…

கலைச்சொல் தெளிவோம்! 92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள்

92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள் உயர்பு வெருளி-Acrophobia உயர்நிலை வெருளி-Altophobia உயர வெருளி-Hypsiphobia   ஆழம் பற்றிய அச்சம் வருவதுபோல், உயரம் பற்றிய அச்சமும் இயல்புதானே! சங்கப்பாடல்களில் உயர்(210), உயர்க்குவை(1), உயர்க(3), உயர்த்த(8), உயர்த்து(4), உயர்திணை(1), உயர்ந்த(15), உயர்ந்ததேஎம்(1), உயர்ந்தவர்(1), உயர்ந்தவள்(1), உயர்ந்தன்று(4), உயர்ந்திசினோர்(1), உயர்ந்து(17), உயர்ந்துழி(1), உயர்ந்தோர்(8), உயர்ந்தோருலகு(1), உயர்ந்தோர்நாடு(1), உயர்ந்தோருலகம்(1), உயர்ந்தோன்(1), உயரிநிலைஉலகம்(7), உயர்நிலைஉலகு(5), உயர்பு(4), உயர்வு(2), உயர(2), உயரி(2), உயரிய(6), உயரும்(1), உயருலகு(1) என மலையுச்சி போன்ற உயரமான இடங்களைக் குறிக்கும் வகையிலும் உயரத்தின் அடிப்படையில் பண்பில்,…

கலைச்சொல் தெளிவோம்! 91. உணவு வெருளி-Sitophobia

91. உணவு வெருளி-Sitophobia   முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் (பெரும்பாண் ஆற்றுப்படை : 246) சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் (அகநானூறு : 283.5) பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட (மதுரைக் காஞ்சி : 660) வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த (பெரும்பாண் ஆற்றுப்படை : 137) ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், (பட்டினப் பாலை : 191) சிறு புல் உணவு, நெறி பட மறுகி, (அகநானூறு : 377.2) உண்டி கொடுத்தோர்…