அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! – இரவிக்குமார்
அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! தமிழறிஞர் அ.அ.மணவாளன் (ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018) தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம் பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத் திருமதி சரசுவதி என்ற மனைவியும்,…
வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்
வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும் சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017 மாலை 3.00 முதல் இரவு 8.00 வரை அ/மி. கனகதுருக்ககை யம்மன் ஆலயம், இலண்டன் சாகித்தியஇரத்தினா, காலம் சென்ற முல்லைமணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டமும் அவரின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்
மாவீரர்களைச்சிறப்பிப்போம்!-வவுனியா மாவட்ட மக்கள் குழு
மண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த் தட்டி எழுப்பிச் சிறப்பிப்போம்! கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!! ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஈகையரை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்டமக்கள் குழு. படைவழித் தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க ஆற்றல்களின் அனைத்து வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தித் தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பகுதிகள் மீது நடத்திய நிலக்கவர்வு(ஆக்கிரமிப்பு)ப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது….
பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கௌதமன் காலமானார்
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின் வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 67. இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், இன்று 29.12.13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கௌதமன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். செனாய் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கௌதமன் உடலுக்குத்…