காப்புறுதி அளித்துத் தன் காப்பை இழந்தவர் – கதையல்ல உண்மை!
பிணைக்கையொப்பம் இடுவோர் விழிப்பாக இருங்கள்! “பனை மரத்தில் பாதி தூரம் ஏறுவதும் பிணைக் கையெழுத்திடுவதும் ஒன்று” என்பது முதியோர் வாக்கு. “நுங்கு தின்றவன் ஓடிப்போய்விட்டான். மட்டையை நோண்டித் தின்றவன் அகப்பட்டுக்கொண்டான்” என்பது பழமொழி. அவ்வாறு பிணைக் கையெழுத்திட்டு ஓய்வூதியக்காலத்தில் நிம்மதியாகக் காலத்தை ஓட்டாமல் மிகுந்த மனஉளைச்சலடைந்து, பணத்தையும் இழந்து, மனநிம்மதியையும் கெடுத்துக்கொள்கிறார்கள் பலர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டியின் மகன் சடையாண்டி. இவர் அஞ்சல்துறையில் உதவி அஞ்சல் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். அஞ்சல் துறையில் இராசராசன்(குசிலியம்பாறையில் உதவி அஞ்சல் தலைவர்) என்பவரும்…