திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்   15 அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 382)   அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவின்றி ஆள்வோரிடம் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நாட்டில் இயற்கைப் பேரிடர், உட்பகையால் எதிர்ப்பு, அயல்நாட்டுப்பகையால் எதிர்ப்பு முதலான நேர்வுகளில்…