வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26. அடக்க முடைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 26. அடக்க முடைமை 251.அடக்க மனம்புலத் தணுகா தடக்கல். அடக்கம் என்பது மனத்தை ஐம்புலன்களில் இருந்தும் காத்தல் ஆகும் .252.அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல். அடக்கம் என்பது அறிஞர்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடத்தல் ஆகும். அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும். அடக்கம் நல்லொழுக்க நெறியில் நடக்கச் செய்யும். அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும். அடங்காமை நல்லொழுக்க நெறியை மீறச் செய்யும். அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே. அடக்கம் பல வகையான செல்வங்களையும் தரும். அடக்க…