காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல்   தேவதானப்பட்டியில் காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடியாகப் பணம் பெறுகின்றனர்.   தேவதானப்பட்டியில் அரிசிக்கடை, வைகை அணைப் பிரிவு, பேருந்துநிலையம் முதலான பகுதிகளில் மிதியூர்தி(ஆட்டோ) நிறுத்தங்கள் உள்ளன. இப்பகுதியைச்சுற்றிச் சிற்றூர்கள் உள்ளமையாலும், புகழ்பெற்ற அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளதாலும் ஏராளமான வெளியூர்ப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிகின்றனர். உட்கிடை ஊர்களுக்கும், காமாட்சியம்மன் கோவிலுக்கும் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிதியூர்தி, பங்கீட்டு மிதியூர்திகளில் பயணம் செய்கின்றனர். இதில் போதிய…