குமரிக் கண்டம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் – கே.கே.பிள்ளை

குமரிக் கண்டம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள்   வரலாற்றுக் காலத்திலேயே தென்னிந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால் தமிழகத்துத் துறைமுகப் பட்டினங்கள் பல நீரில் மூழ்கிவிட்டன. குமரிமுனைக்குத் தென்பாலும் நிலப்பகுதி இருந்ததாகவும் அதைக் கடல் கொண்டு போயிற்றென்றும் புவியியலார் கருதுகின்றனர். ஆனால், அந்நிலப்பகுதி எவ்வளவு தொலைவுக்குப் பரவியிருந்தது என அறுதியிட்டு அறிய முடியவில்லை.   வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். கடல் கொண்டு போன அத்தென்னிலப் பகுதிக்குக் ‘குமரிக்கண்டம்’ என்றொரு பெயருண்டு. குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும்…

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சிலத் தமிழிசை நூல்கள்

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சில இசை நூல்கள்  இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற்கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி. இடைச்சங்கத்து அநரகுலனென்னும் தெய்வப்பாண்டியன் தேரொடு விசும்புசெல்வோன் திலோத்தமையென்னுந் தெய்வமகளைக்கண்டு தேரிற்கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியாநிற்கத் தோன்றினமையிற் சாரகுமாரனென அப்பெயர்பெற்ற குமரன் இசையறிதற்குச்செய்த இசை நுணுக்கமும், பராசைவமுனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதீயமும், கடைச் சங்கமீரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களில் வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூலுமெனவைந்தும இந்நாடகக் காப்பியக்கருத்தறிந்து நூல்களன்றேனும்…

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இசைக் கருவிகள்

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இசைக் கருவிகள்   இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடுஇறுதிகாணாமையின், அவையும் இறந்தனபோலும், இறக்கவே வரும் பெருங்கலமுதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும்பெற்று ஆயிரங்கோல், தொடுத்தியல்வது; என்ன? ஆயிரநரம்பிற்றாதியாழாகு, மேனையுறுப்புமொப்பன கொளலே, பத்தர…

தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழியமைத்தவர் அடியார்க்கு நல்லார் – மு.வை.அரவிந்தன்

தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழியமைத்தவர் அடியார்க்கு நல்லார்   அடியார்க்கு நல்லார் தமிழ்க்கலையின் மாண்பைப் போற்றி விளக்கியுரைத்த குரல், காலங்கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது.   இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அடியார்க்கு நல்லார் உரையே பெரிதும் உதவியது.   தமிழ்க் கலைகளைப் பல நூற்றாண்டுகளாகக் காத்து வழங்கிய பெருமை இவர் உரைக்கு உண்டு. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்